இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. உலககோப்பையில் இந்திய அணி சூப்பர் 12 போட்டியிலே வெளியேறியதற்கு முக்கிய காரணமாக இருந்த நியூசிலாந்து அணியை ஜெய்ப்பூர் மற்றும் ராஞ்சியில் நடைபெற்ற போட்டிகளில் வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில், கொல்கத்தாவில் நடைபெறும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.  


இந்த தொடரின் மூலமாக இந்திய அணியின் டி20 போட்டிகளில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மாவிற்கு இது முதல் தொடராகும். அணியின் வீரராக, துணை கேப்டனாக ஆடும்போது அதிரடியாக ஆடும் ரோகித் சர்மா முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு கடந்த இரண்டு ஆட்டத்திலும் அதிரடியை காட்டினார். ரோகித் மற்றும் கே.எல்.ராகுல் அதிரடியாலே இந்திய அணி கடந்த இரு போட்டிகளிலுமே வெற்றி பெற்றது.




இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடைபெறும் போட்டி மூலமாக ரோகித்சர்மா புதிய சாதனையை படைக்கும் வாய்ப்பு உள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவும், விராட்கோலியும் முதலிடத்தில் உள்ளனர். கடந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் விராட்கோலியுடன் முதலிடத்தை ரோகித் சர்மா பகிர்ந்துகொண்டார்.


இந்த போட்டியிலும் ரோகித் சர்மா அரைசதங்கள் அடித்தால் டி20 போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித்சர்மா படைப்பார். ரோகித்சர்மாவும், விராட்கோலியும் 29 அரைசதங்களுடன் முதலிடத்தில் உள்ளனர். விராட் கோலி 95 போட்டிகளில் ஆடி 3 ஆயிரத்து 227 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 118 போட்டிகளில் ஆடி 3 ஆயிரத்து 141 ரன்களை குவித்துள்ளார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 25 அரைசதங்களுடன் உள்ளார்.




ரோகித் சர்மா வீரராக ஆடும்போது காட்டிலும், கேப்டனாக ஆடும்போது அதிக ஸ்ட்ரைக்ரேட் வைத்துள்ளார். ரோகித் சர்மா ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் மூன்று அரைசதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற தவிர்க்க முடியாத சாதனையை தன் வசம் வைத்துள்ளார். மேலும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை 264 ரன்களுடன் உள்ளார். இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்வதுடன் புதிய கேப்டன் ரோகித் சர்மா, புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல்டிராவிட் இருவரும் முழு வெற்றியுடன் தொடங்குவார்கள்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண