இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் நேற்று தொடங்கியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தொடங்கினார். மயங்க் அகவர்வாலின் சதம், கில்லின் 40+ ரன்களால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 221 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்தின் அஜாஸ் படேல் முதல் நாள் ஆட்டத்தில் சரிந்த 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். 


நேற்று மட்டும் 4 விக்கெட்டுகள் எடுத்திருந்த நிலையில், இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்றும், அஜாஸின் ஆதிக்கம் தொடர்ந்தது. இன்று 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் அவர், இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி கிரிக்கெட் சாதனையில் இணைந்திருக்கிறார்.






டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய வீரர்கள்:


10-53 - ஜிம் லேக்கர்(இங்கிலாந்து) vs ஆஸ்திரேலியா(1956)
10-74 - அனில் கும்ப்ளே(இந்தியா) vs பாகிஸ்தான்(1999)
10-119 - அஜஸ் பட்டேல்(நியூசிலாந்து) vs இந்தியா(2021)


இந்திய மண்ணில் ஒரே இன்னிங்ஸில் அதிக விக்கெட் வீழ்த்திய வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள்:


10-119 ; அஜஸ் பட்டேல்(நியூசிலாந்து)- வான்கடே மைதானம் (2021)
8-50 ; நாதன் லயான்(ஆஸ்திரேலியா)-  சின்னாசாமி மைதானம் (2017)
8-64 ; குளூஸ்னர்(தென்னாப்பிரிக்கா)- ஈடன் கார்டன்ஸ் மைதானம்(1996)
8-68 ; சிகந்தர் பட்(பாகிஸ்தான்)- அருண் ஜெட்லி மைதானம் (1979)
8-215 ; ஜேசன் கிரேசா(ஆஸ்திரேலியா)-விதர்பா மைதானம்(2008)


இதனால், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்கள் எடுத்திருக்கிறது இந்திய அணி. சிறப்பாக ஆடிய ஓப்பனர் மயங்க் அகர்வால், 150 ரன்கள் எடுத்து அசத்தினார். அக்சர் படேல், டெஸ்ட் போட்டியில் முதல் அரை சதம் கடந்தும், கில் 40+ ரன்கள் எடுத்தும் இந்திய அணியின் ஸ்கோருக்கு பங்காற்றினர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண