IND vs NZ Final: சாம்பியன்ஸ் ட்ராபி - பேட்டிங், பவுலிங்கில் அசத்திய வீரர்கள் - யார் யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை?

IND vs NZ ICC Champions Trophy Final: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை சேர்த்த வீரர்கள் குறித்து ந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

IND vs NZ ICC Champions Trophy Final: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் வெற்றி பெற்ற இந்தியா உட்பட, ஒவ்வொரு அணிக்கும் எவ்வளவு பரிசு என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி:

நொடிக்கு நொடி விறுப்பாக அமைந்த ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அபார வெற்றி பெற்றது. 252 ரன்கள் என்ற இலக்கை துரத்திய வேளையில், கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்களை விளாசி வெற்றியை உறுதி செய்தார். சாம்பியன் பட்டம் வென்றதோடு, ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார். நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா, தொடர்நாயகன் விருதை வென்றார். இந்நிலையில், இந்த போட்டியில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை சேர்த்த வீரர்கள் மற்றும் யார் யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை என்பது குறித்த விவரங்களை இங்கே அறியலாம்.

அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள்:

1. ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) - 2 சதங்கள் உட்பட 263 ரன்கள்  

2. ஸ்ரேயாஸ் அய்யர் (இந்தியா) - 2 அரைசதங்கள் உட்பட 243 ரன்கள்

3. பென் டக்கெட் (இங்கிலாந்து) - ஒரு சதம் உட்பட 227 ரன்கள்

4. ஜோ ரூட் (இங்கிலாந்து) - ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 225 ரன்கள்

விராட் கோலி (இந்தியா) - ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 218 ரன்கள்

அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள்

1. மேட் ஹென்றி (நியூசிலாந்து) - ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகள் உட்பட 10 விக்கெட்டுகள் 

2. வருண் சக்ரவர்த்தி (இந்தியா) - ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகள் உட்பட 9 விக்கெட்டுகள் 

3. முகமது ஷமி (இந்தியா) - ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகள் உட்பட 10 விக்கெட்டுகள் 

4. மிட்செல் சாண்ட்னர் (நியூசிலாந்து) - 7 விக்கெட்டுகள்

5. குல்தீப் யாதவ் (இந்தியா) - 7 விக்கெட்டுகள் 

அதிரடி சம்பவங்கள்

  • நடப்பு போட்டியில் மட்டுமின்றி ஐசிசி சாம்பியன்ஷிப் வரலாற்றிலேயே ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராக, அரையிறுதிப்ப்போடியில் தென்னாப்ரிக்காவிற்கு எதிராக நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 362 ரன்களை சேர்த்தது.
  • சாம்பியன்ஸ் ட்ராபி வரலாற்றிலேயே ஒரு போட்டியில் அதிக ரன் சேர்த்த வீரர் என்ற பெருமையை ஆஃப்கானிஸ்தானின் இப்ராஹிம் ஜார்டன் பெற்றார். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 146 பந்துகளில் 177 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.
  • நடப்பு சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி 8 ஓவர்களை வீசி வெறும் 42 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இது இந்த போட்டியின் சிறந்த பந்துவீச்சாகும்.

யார் யாருக்கு எவ்வளவு பரிசு?

  • சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ. 19.45 கோடி பரிசுத்தொகை
  • இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்த நியூசிலாந்து அணிக்கு ரூ. 9.72 கோடி பரிசுத்தொகை
  • அரையிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகளுக்கு தலா ரூ. 4.86 கோடி பரிசுத்தொகை
  • ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களைப் பிடித்த ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு தலா ரூ. 3.04 கோடி பரிசு
  • ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தை பிடித்த பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு தலா ரூ. 1.21 கோடி பரிசு
  • லீக் சுற்றில் அணிகள் பெற்ற ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ. 29.5 லட்சம் பரிசு

  • போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு அணிக்கும் ரூ. 1.08 கோடி பரிசு

  • 2025 சாம்பியன்ஸ் டிராபியின் மொத்த பரிசுத் தொகை $6.9 மில்லியன் (ரூ. 59.9 கோடி) மதிப்புடையது, இது 2017 போட்டியை விட 53 சதவீதம் அதிகமாகும்.

Continues below advertisement