IND Vs NZ 3rd T20I: டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய இளம் படை நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டியில் விளையாட திட்டமிடப்பட்டது. இதில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. 


சூர்யகுமார் பலம்:


மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், முதலாவது போட்டி மழையால் தடைபட்டது. இரண்டாவது போட்டியில் அனுபவம் வாய்ந்த நியூசிலாந்து அணியை இளம் இந்திய அணி அடித்து நொறுக்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 111 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இந்திய அணி 191 ரன்கள் குவித்தது. 


192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை சந்தித்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சாவலை அளித்தனர் இந்திய பந்துவீச்சாளர்கள்.
குறிப்பாக தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 19 ஆவது ஓவரை வீசிய தீபக் ஹூடா அந்த ஓவரின் 2ஆவது பந்தில் இஷ் சோதியை ஆட்டமிழக்கச் செய்தார். இந்த போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் டிம் சவுதி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். 






கேன் வில்லியம்சன் விலகல்


மூன்றாவது போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், நேற்று நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சொந்த காரணங்களால் மூன்றாவது போட்டியில் இருந்து விலகியுள்ளார். இந்த போட்டியில் டிம் சவுதி  கேப்டனாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?


மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று மதியம் 12 மணிக்கு மெக்லன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இன்னும் களமிறக்கப்படாத சஞ்சு சாம்சனுக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்குமா? அவரை கேப்டன் ஹர்திக் களமிறக்குவாரா என ரசிகர்கள் மத்தியில் பெரும் எத்ரி பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஏற்கனவே 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதால், இந்த போட்டியை வென்றால் தொடரை வெல்லும். மேலும், சொந்த மண்ணில் தொடரை இலக்கக் கூடாது என இந்த போட்டியில் வெல்ல கடும் முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் முக்கியமான போட்டியில் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. 


குறுக்கிடும் மழை


போட்டி நடக்கும் நேப்பியரில் அமைந்துள்ள மெக்லைன் பார்க்கில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதமாகலாம். தொடர்ந்து மழை பெய்து வந்தால் போட்டி ரத்து ஆகவும் வாய்ப்புகள் இருக்கிறது. 


இந்திய அணி: சுப்மான் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஸ்ரேயாஸ் ஐய் , குல்தீப் யாதவ், ஹர்ஷல் படேல்


நியூசிலாந்து அணி: ஃபின் ஆலன், டெவோன் கான்வே(விக்கெட் கீப்பர்), மார்க் சாம்ப்மென், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுதி (கேப்டன்), ஆடம் மில்னே, லாக்கி பெர்குசன், பிளேர் டிக்னர், மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி