மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட்கோலி பேட்டிங்கைத் தொடங்கினார். மயங்க் அகர்வாலும், சுப்மன் கில்லும் இணைந்து அற்புதமான தொடக்கத்தை அளித்தனர். 79 ரன்களில் இந்த ஜோடி பிரிந்த நிலையில், புஜாராவும் டக் அவுட் ஆகியதால் கேப்டன் கோலி களமிறங்கினார்.




நீண்ட நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கிய விராட்கோலி  4 பந்துகளில் ரன் ஏதுமின்றி அஜாஸ் படேல் பந்தில் அவுட்டானார். ஆனால், இந்த அவுட்தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அஜாஸ் படேல் வீசிய பந்தில் கோலிக்கு கள நடுவர் அனில் சவுத்ரி அவுட் வழங்கினார். உடனடியாக விராட்கோலி மூன்றாவது நடுவரிடம் ரிவியூ கேட்டார்.






இதை மூன்றாவது நடுவரும் மீண்டும், மீண்டும் ரிவி ரிப்ளேயில் பார்த்தபோது அஜாஸ் படேல் வீசிய பந்து ஒரே நேரத்தில் பேட்டிலும், கோலியின் பேடிலும் (கால்காப்பிலும்) பட்டது. எல்.பி.டபுள்யூ விதிப்படி பேட்டில் பந்துபட்டுவிட்டாலே அவுட் தரக்கூடாது. ஆனால், கோலிக்கு மூன்றாவது நடுவர் அவுட் அளித்தது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.




இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு கேப்டன் கோலி, டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அம்பயரின் தவறான அவுட்டால் கோலி மிகுந்த அதிருப்தியுடன் பெவிலியன் திரும்பினார். மேலம், பெவிலியன் திரும்பும்போது பவுண்டரிக்கான எல்லைக்கோட்டை பேட்டால் அடித்துவிட்டு செல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண