இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இன்று தொடங்கி நடைபெற உள்ளது. டி20 கேப்டன் துறப்பு, விமர்சனம் இவற்றை கடந்து, நீண்ட ஓய்வுக்கு பின் வீராட் கோலி இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறார். கேப்டனாக அவர் இன்று களம் கானும் நிலையில், முதல் டெஸ்டில் கேப்டனாக பணியாற்றிய அஜின்கே ரஹானே, துணை கேப்டனாக போட்டியில் தொடர்வார் என தெரிகிறது.
இதற்கிடையில் கோலியின் வருகை காரணமாக, முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற யார் வெளியேற்றப்படப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் போட்டியில் பங்கேற்கும் இந்தியா அணி வீரர்கள், மும்பையில் தங்கியிருந்த விடுதியில் இருந்து சற்று முன் வான்கடே மைதானத்திற்கு வந்தடைந்தனர். பேருந்தில் வந்திறங்கிய வீரர்களில் கோலி மட்டும் வித்தியாசமாக தென்பட்டார்.
அதற்கு காரணம் அவர் கையில் இருந்த பேட். பாலித்தீன் கவர் செய்யப்பட்ட இரு புதிய பேட்களை அவர் கொண்டு வந்தார். வழக்கம் போல அவரது ஸ்பான்சரான எம்ஆர்எப்., நிறுவனத்தின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அந்த பேட்டுகளை அவர் கையில் எடுத்து வரும் போது, அவர் கூற நினைப்பது ஒன்று தான், ‛பேட் புதுசு... நானும் புதிதாய் வந்திருக்கிறேன்...’ என்பதை பதிவு செய்யவே கோலி புதிய பேட் உடன் மைதானத்திற்கு வந்ததாக தெரிகிறது.
இன்றைய போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் ருத்ரதாண்டவமாக இருக்கும் என தெரிகிறது. புதிய மனதோடு, புதிய உணர்வோடு இன்று கோலி களம் காண்பார் என்று கூறப்பட்ட நிலையில், புதிய பேட் உடனும் அவர் களம் காண உள்ளார். தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்றைய அவரது ஆட்டம் இருக்கும். கடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி செய்த தவறுகளை திருத்தி, இந்த டெஸ்ட் போட்டியை கைப்பற்ற கோலி புதிய வியூகங்களை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்