மும்பையில் நடைபெற்று வரும் இந்தியா- நியூசிலாந்து டெஸ்ட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இரண்டாவது இன்னிங்சில் நேற்று விக்கெட் இழப்பின்றி 69 ரன்களை எடுத்திருந்த இந்திய அணி, மூன்றாவது நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்து ஆடியது. கடந்த போட்டியில் 150 ரன்கள் அடித்த மயங்க் அகர்வால் தொடர்ந்து இன்றும் சிறப்பாக ஆடினர். இந்திய அணி 276 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை எடுத்திருந்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது.




இதையடுத்து, நியூசிலாந்திற்கு 540 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்துக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் டாம் லாதம் 6 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார். அவர் ஆட்டமிழந்த பிறகு ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல்லும், வில் யங்கும் அதிரடியாக ஆட னர். அணியின் ஸ்கோர் 45 ஆக உயர்ந்தபோது வில் யங் 20 ரன்களில் அஸ்வின் பந்தில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச்கொடுத்து வெளியேறினார்.


பின்னர், களமிறங்கிய மூத்த வீரர் ராஸ் டெய்லர் அதிரடியாக ஆட முயற்சித்தார். ஆனால், அவரும் அஸ்வின் சுழலில் சிக்கி 6 ரன்களில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் நான்கு இன்னிங்சிலும் டெய்லர் மோசமாக பேட்டிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




இதையடுத்து, டேரில் மிட்செல்லும்- ஹென்றி நிகோலஸ் ஜோடி ரன்களை சேர்க்க பொறுப்பாக ஆடியது. குறிப்பாக. டேரில் மிட்செல் அதிரடியாக ஆடினார். அணியின் ஸ்கோர் 128 ரன்களை எட்டியபோது அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த டேரில் மிட்செல் அக்ஷர் படேல் சுழலில் சிக்கி ஜெயந்த் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 92 பந்தில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 60 ரன்களை சேர்த்து வெளியேறினார். அவர் ஆட்டமிழந்த சில நிமிடங்களில் ஒரு ரன் எடுக்க ஆசைப்பட்டு, விக்கெட் கீப்பர் டாம் பளண்டெல் ரன்அவுட் ஆனார். இன்றைய ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 45 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.


ஹென்றி நிகோலஸ் 86 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 36 ரன்களும். ரச்சின் ரவீந்திரா 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆட்டம் முடிய இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், நியூசிலாந்தின் வெற்றிக்கு 400 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது. இதனால், இந்த போட்டியில் இந்தியாவிற்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்தியா சார்பில் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்‌ஷர் படேல் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வில் யங்கை ஆட்டமிழக்கச் செய்தபோது நடப்பாண்டில் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.




முன்னதாக, இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் 62 ரன்களும், சுப்மன்கில், புஜாரா தலா 47 ரன்களும், கோலி 36 ரன்களும் எடுத்திருந்தனர். அஜாஸ் படேல் இந்த டெஸ்ட் போட்டியில் மட்டும் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொட


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண