இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு அவுட்டான நிலையில், இந்தியா முதல் இன்னிங்சில் 156 ரன்களுக்கு அவுட்டானது. 3வது நாளான இன்று நியூசிலாந்து அணி ஏற்கனவே 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியது. 


359 ரன்கள் டார்கெட்:


2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியை இந்திய வீரர்கள் தங்கள் சுழலால் கட்டுப்படுத்தினர்.  ப்ளண்டல் 40 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த சான்ட்னர், சவுதி அடுத்தடுத்து அவுட்டாகினர். ஆனால், கிளென் ப்லிப்ஸ் அதிரடியாக ஆடினார். அவரது அதிரடியால் 250 ரன்களை கடந்தது. ஆனால் நியூசிலாந்து அணி 255 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்சில் ஆல் அவுட்டானது. இதனால், இந்திய அணிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


359 ரன்கள் என்ற கடின இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது. ஆடுகளத்தில் ஏற்கனவே பந்துகள் நன்றாக சுழல்வதால் கடினமான இலக்குடன் களமிறங்கியுள்ள இந்திய அணிக்கு மேலும் சவாலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 


கண்டிப்பாக ரிசல்ட்:


நியூசிலாந்து அணி நேற்று 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 3வது நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்தது. விக்கெட் கீப்பர் ப்ளண்டெல் 41 ரன்களில் ஜடேஜா சுழலில் வெளியேற, அடுத்து வந்த சான்ட்னர் 3 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து, இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் ஜடேஜா, அஸ்வின் ஆதிக்கம் செலுத்தினர். இறுதியில் 255 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல் அவுட்டாகியது,. இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ள 359 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியாவின் ஜெய்ஸ்வால் – ரோகித்சர்மா ஜோடி களமிறங்கியுள்ளது. களமிறங்கியது முதலே இருவரும் அதிரடியாக ஆடி வருகின்றனர். இந்த போட்டி முடிய இன்றுடன் சேர்த்து 3 நாட்கள் இருப்பதால் இந்த போட்டிக்கு கட்டாயம் முடிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பேட்டிங்கில் அசத்துமா இந்தியா?


இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் இந்திய மண்ணில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தொடரை வென்று சாதனை படைக்கும். அதேசமயம் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை 1-1 என்று சமன் செய்வதுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்வதும் எளிதாக இருக்கும்.


இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பி வரும் சூழலில், ரோகித், ஜெய்ஸ்வால், கோலி, சுப்மன்கில், ரிஷப்பண்ட், சர்பராஸ்கான் என அனைவரும் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும்.


நட்சத்திர வீரர்கள் கைகொடுத்து ஆடினால் மட்டுமே இந்திய அணி இந்த போட்டியில் அபார வெற்றி பெற இயலும். இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் செய்த அதிகபட்ச ரன் சேசிங் 387 ஆகும். இங்கிலாந்திற்கு எதிராக 2008ம் ஆண்டு சென்னை மைதானத்தில் இந்திய அணி இந்த இலக்கை சச்சின் டெண்டுல்கர் சத உதவியுடன் எட்டியது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 300 ரன்களுக்கு மேலான இலக்கை 2வது முறையாக எட்டிய சாதனையை படைக்கும்.