இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரஹானே, ஜடேஜா காயம் காரணமாக விலகனர். அவர்களுக்கு பதிலாக கேப்டன் கோலியும், ஜெயந்த் யாதவும் களமிறங்கினர். டாஸ் வென்ற கேப்டன் கோலி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார்.
இந்தியாவின் இன்னிங்சை தொடங்கிய மயங்க் அகர்வால் ஆட்டம் தொடங்கியது முதல் நிதானமாகவும், அவ்வப்போது ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் விளாசினார். ஒருமுனையில் சுப்மன்கில், புஜாரா, விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் என்று விக்கெட்டுகள் விழுந்தாலும், மயங்க் அகர்வால் மட்டும் தனி ஆளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சிறப்பாக ஆடிய மயங்க் அகர்வால் 197 பந்துகளில் சதம் அடித்தார். அவர் 13 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 100 ரன்களை எடுத்தார். சிறப்பாக ஆடி வரும் மயங்க் அகர்வால் தொடர்ந்து ஆடி வருகிறார். அவருடன் கடந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக ஆடிய விருத்திமான் சஹாவும் நிதானமாக ஆடி வருகிறார். இந்திய அணி சற்றுமுன்வரை 63 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை எடுத்து ஆடி வருகிறது.
இதன்படி, இந்தியாவின் இன்னிங்சை மயங்க் அகர்வாலும், சுப்மன் கில்லும் தொடங்கினர். இருவரும் இணைந்து நிதானமாகவும், அதே நேரத்தில் சிறப்பாகவும் ஆடினர். அணியின் ஸ்கோர் 80 ரன்களாக உயர்ந்தபோது சுப்மன் கில் அஜாஸ் படேல் பந்தில் ராஸ் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய புஜாரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்த வேளையில், அவரும் அஜாஸ் படேல் பந்தில் போல்டாகினார். 5 பந்துகளை மட்டுமே சந்தித்த புஜாரா டக் அவுட் ஆகியது ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது. இதையடுத்து, நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய கேப்டன் விராட்கோலி களமிறங்கினார்.
கோலியிடம் ரசிகர்கள் சிறப்பான இன்னிங்சை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், அஜாஸ் படேல் பந்தில் விராட்கோலிக்கு கள நடுவர் எல்.பி.டபுள்யூ வழங்கினார். உடனே மூன்றாவது நடுவரிடம் ரிவியூ சென்ற விராட்கோலிக்கு, மூன்றாவது நடுவரும் அவுட் வழங்கினார். இதனால், அவர் அதிருப்தியுடன் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்களில் அஜாஸ் படேல் பந்தில் ஆட்டமிழந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்