இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இன்று தொடங்கி நடைபெற உள்ளது. டி20 கேப்டன் துறப்பு, விமர்சனம் இவற்றை கடந்து, நீண்ட ஓய்வுக்கு பின் வீராட் கோலி இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறார். கேப்டனாக அவர் இன்று களம் கானும் நிலையில், முதல் டெஸ்டில் கேப்டனாக பணியாற்றிய அஜின்கே ரஹானே, துணை கேப்டனாக போட்டியில் தொடர்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.


ஆனால், மும்பையில் பெய்து வரும் கனமழையால் இன்று வான்கடே மைதானத்தில் தொடங்க வேண்டிய இரண்டாவது போட்டி தாமதமாகிறது. 9 மணிக்கு போட வேண்டிய டாஸ் அரை மணி நேரம் தாமதமானது. பின்பு, மீண்டும் தாமதமாகி 10.30 மணிக்கு மைதானத்தை ஆய்வு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், இஷாந்த் ஷர்மா, ஜடேஜா, ரஹானே ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவர்கள் விலக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்திருக்கிறது. இஷாந்த் ஷர்மாவுக்கு இடது கை விரலில் காயமும், ஜடேஜாவுக்கு வலது முன்கையில் காயமும், இடது தொடை பகுதியில் வீக்கமும் ஏற்பட்டுள்ளதால் மூன்று இந்திய வீரர்கள் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என பிசிசிஐ அறிவித்திருக்கிறது.


ஏற்கனவே, காயம் காரணமாக சாஹாவுக்கு பதில் பரத் கீப்பிங் செய்து வரும் நிலையில், இப்போது மேலும் மூன்று வீரர்கள் விலகுவதாக பிசிசிஐ அறிவித்திருப்பதால் இந்திய அணி வேறு திட்டத்தோடு களமிறங்க உள்ளதாக தெரிகிறது.






அதுமட்டுமில்லாமல், நியூசிலாந்து அணியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேப்டன் வில்லியம்சனுக்கு முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என நியூசிலாந்து கிரிக்கெட் அறிவித்திருக்கிறது. அவருக்கு பதிலாக, டாம் லாதம் கேப்டனாக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண