உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூர் மைதானத்தில இந்தியாவும், நியூசிலாந்தும் நேருக்கு நேர் மோத உள்ளன. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த அணிகளில் நியூசிலாந்தும், இந்தியாவும் முன்னணியில் உள்ளன. இரு அணிகளும் இதுவரை 60 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியாவின் ஆதிக்கமே ஓங்கியுள்ளது.




இந்திய அணி 21 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 26 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இரு அணிகளும் கடைசியாக ஆடிய 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கான்பூர் மைதானத்தில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலுமே இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.


இந்தியாவில் நியூசிலாந்து அணியும், இந்திய அணியும் இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது. இதில், 16 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. 16 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. நியூசிலாந்து அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா 12 முறை முதலில் பேட்டிங் செய்தும், 9 முறை இரண்டாவது பேட் செய்தும் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி 5 முறை முதலில் பேட்டிங் செய்தும், 8 முறை இரண்டாவது பேட்டிங் செய்தும் வெற்றி பெற்றுள்ளது.




இந்தியா சார்பில் தனிநபர் அதிகபட்சமாக ஒரு போட்டியில் வினு மன்கட் 231 ரன்களை நியூசிலாந்திற்கு எதிராக குவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக நியூசிலாந்திற்கு எதிராக இந்தியாவின் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 1,659 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். அதேபோல, இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து அணி சார்பில் பிரண்டன் மெக்கல்லம் 302 ரன்களை தனிநபர் அதிகபட்சமாக குவித்துள்ளார். மேலும், இந்தியாவிற்கு எதிராக அதிக டெஸ்ட் ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் 1,224 ரன்களுடன் பிரண்டன் மெக்கல்லம் தன் கைவசம் வைத்துள்ளார்.




நியூசிலாந்திற்கு எதிராக வெங்கட்ராகவன் ஒரே போட்டியில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றியதும், ஒட்டுமொத்தமாக பிஷன்பேடி 57 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதும் இதுவரையிலான சாதனை ஆகும். அதேபோல. இந்தியாவிற்கு எதிராக ரிச்சர்ட் ஹாட்லி 7 விக்கெட்டுகளை ஒரே போட்டியில் கைப்பற்றியதும், ஒட்டுமொத்தமாக 65 விக்கெட்டுகளை கைப்பற்றியதும் இந்தியாவிற்கு எதிரான அதிகபட்ச விக்கெட் சாதனை ஆகும்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண