008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கும் போது மற்ற நாடுகளில் நடைபெறும் டி20 லீக் தொடர்கள் போல் தொடங்கப்பட்டது. அப்போது இந்தத் தொடரின் முக்கிய நோக்கம் இந்தியாவில் உள்ள உள்ளூர் திறமை வெளியே கொண்டு வர ஒரு பாலமாக அமையும் என்று கருதப்பட்டது. அதன்படி தொடங்கப்பட்ட ஐபிஎல் இப்போது முழு பிஸினசாகவே பார்க்கப்படுகிறது.
வழக்கத்தை விட வரும் ஆண்டு இன்னும் சிறப்பாக நடக்கவுள்ளது ஐபிஎல். வரும் ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு புது அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இரு அணிகளுக்கான உரிமையாளர்கள் மற்றும் அவர்கள் அணியை ஏலத்தில் எடுத்த தொகைகள் பிரம்மிக்க வைத்துள்ளன. அதன்படி ஆர்பிஎஸ்ஜி நிறுவனம் 7,090 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியையும், சிவிசி நிறுவனம் 5625 கோடி ரூபாய்க்கு அகமதாபாத் அணியையும் எடுத்துள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கே.எல்.ராகுலை தக்கவைக்க ஆர்வம் காட்டவில்ல என்று கூறப்படுகிறது. அந்த அணி சார்பில் வெறும் 2 வீரர்கள் மட்டும் தக்கவைக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. மாயங்க் அகர்வால், ரவி பிஷ்னாய், ஷாரூக் கான் ஆகிய மூவரில் இருவர் தக்கவைக்கப்படலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்தநிலையில், பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் கே.எல். ராகுல் அந்த அணியிலிருந்து பிரிந்து ஐபிஎல் 2022 தொடரில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ அணியில் இணைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை அந்த அணி சார்பில் 4 பேர் தக்கவைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அடுத்த மூன்று சீசன்களுக்கு தோனி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இருப்பார் என்றும், மொயின் அலி அல்லது சாம் கரணை அணியில் தக்க வைக்க சி.எஸ்.கே.முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. அனுபவ வீரர் பிராவோவை சென்னை அணி இம்முறை தக்கவைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கருதப்படுகிறது.
Cricbuzz-இல் வெளியான தகவலின்படி, ஐபிஎல் 2022 வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளதாகவும், முதல்போட்டியிலேயே சென்னை அணியும், மும்பை அணியும் விளையாட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையென்றால் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சென்னை களமிறங்கும். இந்த தகவலே சென்னை ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் வெளியான தகவலின்படி, 10 அணிகள் இருப்பதால் 74 ஆட்டங்கள் இருக்கலாம் எனகூறப்படுகிறது. இரண்டு மாதங்கள் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஜூன் கடைசியில் இறுதிப்போட்டி இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்