IND vs NZ 1st T20 LIVE: 13 ஓவர்கள் முடிவில் 90 - 5 என திணறும் இந்தியா; திருப்பியடிக்கிறதா நியூசிலாந்து; எண்ட் கார்டு என்ன..?
IND vs NZ 1st T20 LIVE Score: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
தொடக்கம் முதல் திணறி வரும் இந்திய அணி 14.1 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்தது.
சரிவில் இருந்த இந்திய அணியை மெல்ல மெல்ல மீட்டுக் கொண்டு வந்த ஹர்திக் பாண்டியா சூர்யகுமார் யார்தவ் ஜோடி அடுத்தடுத்து ஆட்டமிழந்தது. ஹர்திக் 20 பந்தில் 21 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.
34 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்த நிலையில் சூர்யகுமார் யாதவ் சோதி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்துள்ளது.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது. 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 33 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது.
போட்டியின் கடைசி ஓவரில் நியூசிலாந்து அணி 27 ரன்கள் சேர்த்தது.
20வது ஓவரின் முதல் இரண்டு பந்தில் மிட்ஷெல் மூன்று சிக்ஸர் விளாசியுள்ளார். முதல் பந்து நோபாலாக போக அந்த பந்தை சிக்சருக்கு விரட்டினார். அடுத்த பந்தான ஃபிரீகிட் பந்தும் சிக்ஸருக்கு விரட்ட, இரண்டாவது பந்தும் சிக்ஸருக்கு விரட்டப்பட்டது. இதனால் முதல் இரண்டு பந்தில் மூன்று சிக்ஸர் விளாசியுள்ளார்.
19வது ஓவரின் இறுதிப் பந்தில் நியூசிலாந்து அணியின் சாண்டனர் சிவம் மாவி பந்து வீச்சில் அவுட் ஆனார்.
போட்டியின் 18வது ஓவரில் கான்வே கேட்ச் ஆகி வெளியேற அதன் பின்னர் களமிறங்கிய பிராஸ்வெல்லும் ரன் அவுட் ஆனார்.
ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிக் கொண்டு இருந்த கான்வே அரைசதம் கடந்த நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் தீபக் ஹூடாவிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார்.
13 ஓவரின் ஐந்தாவது பந்தில் சிறப்பாக ஆடிவந்த பிலிப்ஸ் டிப் மிட் சைடில் நின்று கொண்டு இருந்த சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்த ஓவரை குல்தீப் வீசினார்.
13வது ஓவரில் கான்வே ஆடித்த பவுண்டரியின் மூலம் நியூசிலாந்து அணி 100 ரன்களைக் கடந்தது.
10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் எடுத்துள்ளது.
தான் வீசிய முதல் ஓவரில் இரண்டாவது பந்திலும், இறுதி பந்திலும் வாஷிங்டன் சுந்தர் விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார்.
அதிரடியாக விளையாடிக் கொண்டு இருந்த ஃபின் ஆலன் வாசிங்டன் சுந்தர் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.
நான்காவது ஓவரின் முதல் பந்தில் நியூசிலாந்து அணியின் ஃபின் ஆலன் இந்த போட்டியின் முதல் சிக்ஸரை விளாசியுள்ளார்.
இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தினை அடுத்தடுத்து ஒய்டாக வீசியுள்ளார் இந்திய அணியின் பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்.
முதல் ஓவரின் நான்காவது மற்றும் ஐந்தாவது பந்தை ஃபின் ஆலன் பவுண்டரிக்கு விரட்டினார்.
இந்திய அணியின் சார்பாக முதல் ஓவரை இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசுகிறார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
Background
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி-20 தொடரில் விளையாடி வருகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஏற்கனவே ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியதோடு, ஐசிசி தரவரிசைப் பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி-20 தொடர் இன்று தொடங்க உள்ளது.
முதல் டி-20 போட்டி:
ஒருநாள் தொடரில் விளையாடிய ரோகித், கோலி மற்றும் சிராஜ் ஆகியோருக்கு, டி-20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி, இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. ஒருநாள் தொடரை போன்று டி-20 தொடரையும் கைப்பற்ற இந்திய அணியும், டி-20 தொடரையாவது கைப்பற்ற வேண்டும் என நியூசிலாந்து அணியும் முனைப்பு காட்டி வருகிறது. இதனால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி நிலவரம்:
சுப்மன் கில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் மற்றும் கேப்டன் பாண்ட்யா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோர் இந்திய அணிக்கு பந்துவீச்சில் வலுசேர்க்கின்றனர். அண்மையில் நியூசிலாந்தில் நடைபெற்ற டி-20 தொடரிலும், பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணி நிலவரம்:
நியூசிலாந்து அணியை பொருத்த வரையில் வில்லியம்சன், சவுதி மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகிய மூத்த வீரர்கள் ஓய்வில் உள்ள நிலையில், பென் லிஸ்டர் அறிமுக வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கான்வே ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் படைத்தவராக உள்ளார். மிட்செல் சாண்ட்னர் தலைமயில், நியூசிலாந்து அணி இந்த தொடரில் களமிறங்க உள்ளது.
ஹெட் டு ஹெட்:
இதுவரை 22 டி-20 போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 12 போட்டிகளில் இந்திய அணியும், 9 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.
மைதான நிலவரம்:
போட்டி நடைபெற உள்ள ராஞ்சி மைதானம் சேஸிங்கிற்கு ஏற்ற மைதானமாக உள்ளது. இதுவரை அங்கு நடைபெற்றுள்ள 25 டி-20 போட்டிகளில், 16 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன.
உத்தேச இந்திய அணி:
சுப்மான் கில், இஷான் கிஷன் (வி.கீ.), ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் , குல்தீப் யாதவ்/யுஸ்வேந்திர சாஹல்
உத்தேச நியூசிலாந்து அணி:
ஃபின் ஆலன், டெவோன் கான்வே, மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), பிளேர் டிக்னர், இஷ் சோதி, பென் லிஸ்டர், லாக்கி பெர்குசன்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -