IND vs NZ, 1st ODI: புயலாக சீறிய நியூசிலாந்து... கதிகலங்கிய ரசிகர்கள்... கடைசி நேரத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி..!

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாட உள்ளது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று நடைபெற்றது.

Continues below advertisement

நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. 

Continues below advertisement

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாட உள்ளது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று நடைபெற்றது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய வீரர்கள் தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ரோகித் சர்மா 34 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க,  விராட் கோலி 8 ரன்களும், இஷான் கிஷன் 5 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில், நியூசிலாந்தின் பந்துவீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளினார்.  ஒன் மேன் ஆர்மியாக அபாரமாக ஆடிய அவர்  87 பந்துகளில் சதத்தை எட்டிய நிலையில், 146 பந்துகளில் இரட்டை சதமடித்து அசத்தினார். இதில் 19 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களும் அடங்கும். 

இறுதியாக அணியின் ஸ்கோர் 345 ரன்களை எட்டிய போது சுப்மன் கில் 208 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் குவித்தது.  பந்து வீச்சை பொறுத்தவரை டேரி மிட்செல், ஹென்ரி ஷிப்லி தலா 2 விக்கெட்டுகளையும், பெர்குசன், டிக்னெர், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் 40 ரன்கள் எடுத்த நிலையில், கிட்டதட்ட அடுத்த 5 வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 110 ரன்களுக்கு அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மிட்செல் பிரேஸ்வெல் தனி ஒருவனாக நியூசிலாந்து அணியை மீட்டெடுக்க போராடினார். 

பின்னால் வந்த மிட்சல் சாண்டனர் இவருக்கு கம்பெனி கொடுக்க நியூசிலாந்து அணி மளமளவென இலக்கை நோக்கி முன்னேறியது,. அபராமாக ஆடிய பிரேஸ்வெல் சதமடித்து அசத்தினார். மிட்செல் சாண்ட்னரும் தன் பங்கிற்கு அரைசதமடித்து அவுட்டானார். இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று விடுமோ என்ற அச்சம் ரசிகர்களுக்கு எழுந்தது. 7 விக்கெட்டுக்கு இந்த ஜோடி 162 ரன்கள் குவித்து அசத்தியது. 

ஆனால் சாண்ட்னருக்கு பின்னால் வந்த வீரர்கள் சோபிக்க தவறியதால் நிர்ணயிக்கப்பட்ட 49.2 ஓவர்களில் நியூசிலாந்து அணி 337 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் 12  ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக முகம்மது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 

 

Continues below advertisement