இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் செய்து இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் முதல் டி20 போட்டியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 


அதில் தீபக் ஹூடா மற்றும் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா 57 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர் விளாசி 104 ரன்கள் எடுத்தார். சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் விளாசி 77 ரன்கள் எடுத்தார். இதன்காரணமாக இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 225 ரன்கள் எடுத்தது. இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடியாக 176 ரன்கள் சேர்த்தனர். 


 






டி20 போட்டிகளில் இந்தியா சார்பில் ஜோடியாக அதிக ரன்கள் அடித்த வீரர்கள்:


176- தீபக் ஹூடா-சஞ்சு சாம்சன் vs அயர்லாந்து (2022)


165-ரோகித் சர்மா-கே.எல்.ராகுல் vs இலங்கை(2017)


160-ரோகித் சர்மா-ஷிகர் தவான் vs அயர்லாந்து(2018)


158-ரோகித் சர்மா-ஷிகர் தவான் vs நியூசிலாந்து(2017)


140-ரோகித் சர்மா-ஷிகர் தவான் vs ஆஃப்கானிஸ்தான்(2021)


138-ரோகித் சர்மா-விராட் கோலி vs தென்னாப்பிரிக்கா(2015)


இதன்மூலம் சர்வதேச டி20 போட்டியில் இந்தியா சார்பில் ஜோடியாக அதிக ஸ்கோர் அடித்த வீரர்கள் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர். இதற்குமான ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஜோடியாக 165 ரன்கள் சேர்த்து இருந்தனர். அந்தச் சாதனையை நேற்று சஞ்சு சாம்சன் -தீபக் ஹூடா ஜோடி முறியடித்துள்ளது. மேலும் இந்தப் பட்டியலில் முதல் முறையாக ரோகித் சர்மா 5 முறை சக வீரர்களுடன் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண