பும்ரா தலைமையிலான இளம் இந்திய அணி  அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி இன்று டப்ளினில் உள்ள வில்லேஜில் நடைபெறுகிறது.


இந்தியா பவுலிங்:


நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ள பும்ரா கேப்டனாக இந்த போட்டியில் கம்பேக் கொடுத்துள்ளார். கம்பேக் கொடுத்துள்ள பும்ரா இந்த போட்டியில் டாஸ் வென்றார். டாஸ் வென்ற பும்ரா முதலில் பந்துவீசுவதாக கூறினார்.  இதையடுத்து, அயர்லாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது.


ஐ.பி.எல். தொடரில் அசத்திய ரிங்குசிங் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அறிமுக வீரராக இந்திய அணியில் களமிறங்குகிறார். அவர் மட்டுமின்றி பிரசித் கிருஷ்ணாவும் டி20 போட்டியில் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.




ரிங்குசிங்:


அயர்லாந்து அணியுடன் ஒப்பிடும்போது இந்திய அணி பலமிகுந்த அணியென்றாலும், பும்ரா தலைமையில் களமிறங்கியிருக்கும் அணியில் பும்ரா, சாம்சனை தவிர மற்ற வீரர்கள் மிக இளம் வீரர்களே ஆவார்கள். இதனால் இந்திய அணி தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தினால் மட்டுமே அயர்லாந்து அணியை வீழ்த்த முடியும். இல்லாவிட்டால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஏற்பட்டது போல இன்னல்களை சந்திக்க நேரிடலாம்


அயர்லாந்து அணியில் கேப்டன் பால் ஸ்டிர்லிங், டக்கர், பால்ப்ரைன், டெக்டர், கம்பேர், டாக்ரெல் ஆகியோர் பலமிகுந்த வீரர்களாக உள்ளனர். பும்ரா தலைமையிலான இந்திய அணியில் துணை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ரிங்குசிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ரவிபிஷ்னோய் களமிறங்க உள்ளனர்.


பந்துவீச்சில் பலம்:


சொந்த மண்ணில் களமிறங்கும் அயர்லாந்து அணி மிகவும் பலமிகுந்த அணியாகவே காணப்படுகிறது. அந்த அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை மார்க் அடர், ஜோஸ்வா லிட்டில், ஒயிட், கிரெக் யங் அனுபவமிகுந்த வீரர்களாக உள்ளனர்.


இந்திய அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கசப்பான அனுபவமே கிடைத்து என்று கூறலாம். டி20 தொடரில் இந்திய அணி எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல ஆடாமல் தொடரை கோட்டைவிட்டது. விராட்கோலி, ரோகித்சர்மா, ஷமி, ராகுல், ஸ்ரேயாஸ் போன்ற வீரர்கள் இல்லாததால் இளம் வீரர்களுக்கு இந்த தொடர் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.


வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சொதப்பிய சஞ்சு சாம்சன் இந்த தொடரில் சொதப்பினால் அவருடைய எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.


மேலும் படிக்க: IND Vs IRE 1st T20 LIVE: டாஸ் வென்ற பும்ரா.. இந்தியா முதலில் பவுலிங்..! வலுவான இலக்கு நிர்ணயிக்குமா அயர்லாந்து?


மேலும் படிக்க: 15 Years Of Virat Kohli: 'ஆட்டநாயகன் விராட் கோலி’.. சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 15 ஆண்டுகள்..!