இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்:


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறதுஅதன்படிமுதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணிஇரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுஇதனிடையேஇந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி  குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. 


இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை  வென்றது. அந்தவகையில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தனது சொந்த நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரை இந்திய அணி  வென்றுள்ளது. இதனிடையே இந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் மார்ச் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.


இங்கிலாந்தை மிரட்டிய இளம் படை:


முன்னதாக இந்த போட்டியில் விராட் கோலி, ரிஷப் பண்ட்,கே.எல்.ராகுல் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாததால் இளம் வீரர்களை வைத்து ரோகித் சர்மா என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இந்த இளம் வீரர்களை வைத்துத்தான் ரோகித் படை இந்த டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.  சர்வதேச டெஸ்ட் உலகிற்கு இந்த தொடரின் மூலம் அறிமுகமானவர்கள் துருவ் ஜூரல், சர்பராஸ்கான் மற்றும் ஆகாஷ் தீப். இளம் வீரர்களான இவர்களின் ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான ஒன்றாக இருந்தது. அதேபோல், தொடக்க ஆட்டக்காரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோரின்
பங்களிப்பும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமானதாக இருந்தது. அவர்களின் செயல்பாடுகளை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


துருவ் ஜூரல்:




ராஜ் கோட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் அறிமுக ஆட்டத்திலேயே துருவ் ஜூரல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த போட்டியில் 46 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில்  7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களுடன் தத்தளித்த போது குல்தீப் யாதவ் உடன் இணைந்து இந்திய அணியை மீட்டார். அந்த போட்டியில் 90 ரன்களை குவித்தார். அதேபோல் இரண்டாவது இன்னிங்ஸில் 39 ரன்களை எடுத்தார். இவருக்கு ஆட்டநாயகன் விருதும் தன்னுடைய அறிமுக போட்டியிலேயே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


சர்பராஸ்கான்:




சர்பராஸ்கான் தான் அறிமுக போட்டியில் 66 பந்துகளில் 62 ரன்களை குவித்தார். அதேபோல், இரண்டாவது இன்னிங்ஸில் 72 பந்துகளில் 68 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் அறிமுக வீரராக களம் இறங்கிய சர்பராஸ்கான் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.


ஆகாஷ் தீப்:




ஆகாஷ் தீப் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்தினார். அதன்படி, 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் தன்னுடைய வாய்ப்பை சரியாக வெளிப்படுத்தினார் ஆகாஷ் தீப்.