இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நான்காம் நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இந்திய அணி 245 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. புஜாரா(66) மற்றும் ரிஷப் பண்ட்(57) இருவரும் அரைசதம் கடந்தனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற 378 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்திருந்தது. 


இந்நிலையில் இன்று 5ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. ரூட் 76* ரன்களுடனும், பேர்ஸ்டோவ் 72* ரன்களுடனும் ஆட்டத்தை தொடங்கினர். சிறப்பாக விளையாடி வந்த ஜோ ரூட் சதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவர் இந்திய அணிக்கு எதிராக 9வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். 


டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்கள்:


ஜோ ரூட்- 25 போட்டிகள்- 9 சதங்கள்


ஸ்டீவ் ஸ்மித்- 14 போட்டிகள்- 8 சதங்கள்


கேரி சாப்ர்ஸ்-18 போட்டிகள்-8 சதங்கள்


விவியன் ரிச்சர்ட்ஸ்- 28 போட்டிகள்- 8 சதங்கள்


ரிக்கி பாண்டிங்-28 போட்டிகள்-8 சதங்கள்


 






மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த பேர்ஸ்டோவும் சதம் கடந்து அசத்தினார். இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 378 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அத்துடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஒரு அணி 350 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 350 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண