இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் 378 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தற்போது ஜோ ரூட், பார்ஸ்டோ சிறப்பான ஆட்டத்தால் வலுவான நிலையில் உள்ளது.


ஆட்டத்தின் கடைசி நாளான இன்று இங்கிலாந்தின் வெற்றிக்கு 119 ரன்களும், இந்தியாவின் வெற்றிக்கு 7 விக்கெட்டுகளும் மட்டுமே தேவை என்பதால் இந்த போட்டியில் வெல்லப்போவது யார்? என்ற பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் லீஸ், ஜாக் கிராவ்லி வலுவான தொடக்கத்தை ஏற்படுத்திய பிறகு ஒல்லி போப்பை டக் அவுட்டாக்கிய இந்திய வீரர்களுக்கு ஜோ ரூட்டும், ஜானி பார்ஸ்டோவும் மிகவும் அச்சுறுத்தலாக அமைந்தனர்.





109 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த பிறகு இங்கிலாந்து அணிக்காக ஜோடி சேர்ந்த பார்ஸ்டோ – ரூட் கூட்டணி அதிரடியாகவே ஆடினார். இதனால், அந்த அணியின் ஸ்கோர் மளமளவென எகிறியது. நேற்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 259 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து களத்தில் இருந்தது.


ஜோ ரூட் 76 ரன்களுடனும், பார்ஸ்டோ 72 ரன்களுடனும் உள்ளனர். குறிப்பாக, பார்ஸ்டோ ஒருநாள் போட்டியைப் போன்று ஆடி வருவதால் அந்த அணியினர் ஸ்கோர் மளமளவென ஏறி வருகிறது. கடைசி நாளான இன்று இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய கேப்டன் பும்ரா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் வேகத்திலும், ஜடேஜா சுழலிலும் இந்த கூட்டணியை பிரிக்கவில்லை.





கடைசி நாளான இன்று அபாயகரமான பேட்ஸ்மேன்களாகிய ஜோ ரூட், ஜானி பார்ஸ்டோவை ஆட்டமிழக்கச் செய்வதுடன் பென்ஸ்டோக்ஸ், சாம்பில்லிங்சையும் காலி செய்ய வேண்டும். இந்த போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலே இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும். இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அந்த அணி தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்யும்.


இந்த போட்டியில் இரு அணிகளுமே வெற்றிபெறவே முனைப்பு காட்டும் என்பதால் கடைசி நாளான இன்று பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பதால் ரசிகர்களுக்கு இன்றைய போட்டி விருந்தாகவே அமையும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண