இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப்பண்ட். 24 வயதே ஆன ரிஷப்பண்ட் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார்.


இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக தடுமாறி வரும் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி வரும் ரிஷப்பண்ட் இந்த போட்டியில் இந்திய அணிக்காக முதல் சிக்ஸரை விளாசினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் என்று மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 100 சிக்ஸர்கள் அடித்த இளம் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.




இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப்பண்ட். மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார். இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக தடுமாறி வரும் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி வரும் ரிஷப்பண்ட் இந்த போட்டியில் இந்திய அணிக்காக முதல் சிக்ஸரை விளாசினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் என்று மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 100 சிக்ஸர்கள் அடித்த இளம் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.






ரிஷப்பண்டின் அபார சாதனையை பாராட்டி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்திய அணிக்காக கடந்த 2017ம் ஆண்டு முதல் ஆடி வரும் ரிஷப்பண்ட் 2018ம் ஆண்டே டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தோனி ஓய்வுக்கு பிறகு தோனியின் இடத்தில் மாற்று வீரராக ரிஷப்பண்ட்டே பார்க்கப்பட்டார். அவரது அபார பேட்டிங் இந்திய அணிக்கு பல முறை கைகொடுத்துள்ளது.




ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்கும் கேப்டனாக இருந்து வரும் ரிஷப்பண்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்வதற்கு மிகவும் உதவிகரமாக இருந்தார். இவரது அபார திறமையால் இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கேப்டனாக ஆடினர். தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் துணை கேப்டனாக களமிறங்கியுள்ளார். துணை கேப்டனாக ரிஷப்பண்ட் மிகவும் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்துள்ளார்.


ரிஷப்பண்ட் 31 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 45 சிக்ஸர்களையும், 24 ஒருநாள் போட்டிகளில் ஆடி 24 சிக்ஸர்களையும், 48 டி20 போட்டிகளில் ஆடி 31 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். 98 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 129 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண