கடந்தாண்டு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று எட்ஜ்பாஸ்டன் நகரில் நாளை தொடங்க உள்ளது. இந்திய அணிக்கு ஏற்கனவே கே.எல்.ராகுல் காயத்தால் பங்கேற்காத நிலையில், கேப்டன் ரோகித் சர்மாவும் கொரோனாவால் ஆட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்திய அணிக்கு முதன்முறையாக பும்ரா கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு எதிரான தொடர் குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், எதிரணியைப் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. வெற்றி மட்டுமே குறிக்கோள் என்று பேசியிருந்தார். அந்த அணியின் முக்கிய ஆல் ரவுண்டரான மொயின் அலி, கடந்த 5 வாரங்களுக்கு முன்பு என்னிடம் கேட்டிருந்தால் இந்தியா இந்த தொடரில் முன்னிலையில் இருந்திருக்கும் என்று கூறியிருப்பேன். ஆனால், தற்போது நாங்கள்தான் வெல்வோம் என்று கூறுகிறேன் என்று இந்திய அணியின் மதிப்பு குறைந்துள்ளதாக கூறினார். பென்ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலியின் பேச்சுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இருவரையும் விளாசித் தள்ளினர்.




கடந்தாண்டு நடைபெற்ற தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பதால் இந்த போட்டியை டிரா செய்தாலே இந்திய அணி தொடரை வென்றுவிடும். இந்திய அணிக்கு ரோகித்சர்மா இல்லாதது மிகப்பெரிய பின்னடைவு ஆகும். இருப்பினும், இந்திய அணிக்கு சுப்மன்கில், மயங்க் அகர்வால் நல்ல தொடக்கத்தை தருவார்கள் என்று நம்பலாம. மயங்க் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொள்வார் என்று ரசிகர்கள் நம்பலாம்.


இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் முன்னாள் கேப்டன் விராட்கோலி மிகப்பெரிய பலமாக உள்ளார். பயிற்சி ஆட்டத்தில் அவர் சிறப்பாக தனது கம்பேக்கை பறைசாற்றினார். அவருடன் புஜாராவும் அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளிப்பார் என்று நம்பலாம். ரிஷப்பண்ட் தனது இயல்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினால் அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும். பயிற்சி ஆட்டத்தில் அசத்திய ஸ்ரீகர் பரத்திற்கு அணியில் வாய்ப்பு கிடைத்தால் பேட்டிங்கில் அசத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.





ஆல்ரவுண்டர்கள் அஸ்வின், ஜடேஜா சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். ஸ்ரேயாஸ், ஹனுமா விஹாரியில் அணியில் இடம் கிடைப்பவர்கள் நிச்சயம் சிறப்பா பேட் செய்தாக வேண்டும். பந்துவீச்சில் ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ் சிறப்பாக வீச வேண்டியது அவசியம். கேப்டன் பொறுப்பில் இருப்பதால் பும்ரா பந்துவீச்சில் அசத்துவார் என்று நம்பலாம். ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்தால் பந்துவீச்சில் அசத்த வேண்டியது அவசியம்.


இந்திய அணியை குறைவாக மதிப்பிட்டுள்ள இங்கிலாந்து அணிக்கு பும்ரா தலைமையிலான இந்திய அணி கண்டிப்பாக பதிலடி அளிக்கும் என்று இன்று நம்பலாம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண