இங்கிலாந்து அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்த இயான் மோர்கன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து, இங்கிலாந்து அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இங்கிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லரை நியமித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


 






இங்கிலாந்து அணியின் தவிர்க்க முடியாத வீரராக ஜோஸ் பட்லர் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த சில மாதங்களாகவே மோசமான பார்ம் காரணமாக தடுமாறி வந்த இயான் மோர்கன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இங்கிலாந்து அணிக்காக உலககோப்பையை வென்றுத்தந்த இயான் மோர்கன் எதிர்வர உள்ள டி20 உலககோப்பையை கருத்தில் கொண்டு கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


இதையடுத்து, இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகிக்கும் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மூன்று வடிவ போட்டிக்கும் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டால் அவரது ஆட்டத்திறன் பாதிக்கப்படும் என்று கருதி ஜோஸ் பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.




வலது கை அதிரடி ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பராக உள்ளார். 31 வயதான ஜோஸ் பட்லர் 151 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10 சதங்கள், 21 அரைசதங்களுடன் 4 ஆயிரத்து 120 ரன்களை விளாசியுள்ளார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடுவதில் பட்லர் மிகவும் கெட்டிக்காரர். 88 டி20 போட்டியில் ஆடி 2 ஆயிரத்து 140 ரன்களை விளாசியுள்ளார். அதில் 1 சதமும், 15 அரைசதங்களும் அடங்கும்.


82 ஐ.பி.எல். போட்டியில் ஆடி 5 சதங்கள், 15 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 831 ரன்களை விளாசினார். கடந்த ஐ.பி.எல். போட்டியில் மட்டும் 4 சதங்களை பட்லர் விளாசினார். பட்லரின் தலைமையின் கீழ் இங்கிலாந்து அணி எவ்வாறு செயல்படப் போகிறது? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண