IND Vs ENG 4th T20: இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-1 என கைப்பற்றியுள்ளது.


தொடரை வென்ற இந்திய அணி


இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி, புனே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா டக் அவுட் ஆக, டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இருப்பினும் ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்ட்யாவின் பொறுப்பான அரைசதத்தால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை எடுத்தது.



இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி பவர்பிளேயில் அதிரடியாக ரன் குவித்தனர்.  ஆனால் அதை பயன்படுத்திய தவறிய பின்கள வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஹாரி ப்ரூக் மட்டுமே பொறுப்பாக ஆடி அரைசதம் விளாசினார். ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், இங்கிலாந்து அணி 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரவ் பிஷ்னோய் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையேயான தொடரின் கடைசி டி20 போட்டி, நாள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.


தொடரும் 14 வருட சாதனை 


சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியதன் மூலம், கேப்டன் சூர்யகுமார் யாதவ் சாதனை படைத்துள்ளார். அதன்படி,  இந்தியாவில் கடந்த 14 ஆண்டுகளாக இங்கிலாந்து அணி, டி20 தொடரை வென்றதே இல்லை என்ற சாதனையை கேப்டன் சூர்யகுமார் யாதவ் தக்கவைத்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து மோசமான சாதனைகளை படைத்து வரும் இந்திய அணி இங்கிலாந்து தொடரிலும் சறுக்குமா? என்ற அச்சம் நிலவியது. ஆனால், அதனை முறியடித்து இளம் வீரர்களை கொண்டு இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.


இதையும் படியுங்கள்: Budget 2025 LIVE: நாடே எதிர்பார்ப்பு! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் - சாமானியனுக்கு சந்தோஷமா?


தோனியால் முடியாததை செய்த ஸ்கை:


கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது,  தோனி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. தோனி தலைமையில் இந்திய அணி, இங்கிலாந்திற்கு எதிராக ஒரு டி20  தொடரை கூட இந்தியா வெல்லவில்லை. அதேநேரம், அவரை தொடர்ந்து கேப்டனான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவருமே, இந்திய மண்ணில் இங்கிலாந்திற்கு எதிராக டி20 தொடரை இழந்ததே இல்லை. அந்த வெற்றிப் பயணத்தை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும் தொடர்கிறது. அதன் மூலம், தோனியால் முடியாததை சூர்யகுமார் யாதவ் செய்து காட்டியுள்ளார்.