Budget 2025 LIVE: ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் வரை உள்ளபவர்களுக்கு வருமான வரி கிடையாது - நிர்மலா அறிவிப்பால் மக்கள் இன்ப அதிர்ச்சி

Union Budget 2025 LIVE Updates: மத்திய அரசின் 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் உடனுக்குடன் அப்டேட்களை கீழே விரிவாக காணலாம்.

சுகுமாறன் Last Updated: 01 Feb 2025 01:55 PM
மத்திய பட்ஜெட் நாட்டிற்கானது அல்ல - தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை

மத்திய பட்ஜெட் நாட்டிற்கானது அல்ல என்றும், ஒரு சாரருக்கானது என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். 

1.70 கோடி விவசாயிகளுக்கு 100 மாவட்டங்களில் விவசாய உற்பத்தியை பெருக்கும் திட்டம் - நிர்மலா சீதாராமன்

1.70 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 100 மாவட்டங்களில் விவசாய உற்பத்தியை பெருக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் 50 சுற்றுலா தளங்கள் மேம்படுத்தப்படும் - நிர்மலா சீதாராமன்

நாடு முழுவதும் 50 சுற்றுலா தளங்கள் அந்தந்த மாநில அரசுடன் இணைந்து மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் 50 சுற்றுலா தளங்கள் மேம்படுத்தப்படும் - நிர்மலா சீதாராமன்

நாடு முழுவதும் 50 சுற்றுலா தளங்கள் அந்தந்த மாநில அரசுடன் இணைந்து மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் 50 சுற்றுலா தளங்கள் மேம்படுத்தப்படும் - நிர்மலா சீதாராமன்

நாடு முழுவதும் 50 சுற்றுலா தளங்கள் அந்தந்த மாநில அரசுடன் இணைந்து மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Budget 2025: பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களும் இல்லை என்று முன்னாள் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

நடுத்தர மக்களுக்கு 40 ஆயிரம் வீடுகள் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் மேலும் 40 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

தாய்மொழியிலே மாணவர்களுக்கான பாடங்களை டிஜிட்டல் முறையில் வழங்க திட்டம்

Budget 2025: தாய்மொழியிலே மாணவர்களுக்கான பாடங்களை டிஜிட்டல் முறையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை - நிதியமைச்சர்

பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

மத்திய பட்ஜெட்டிற்கு பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் வரவேற்பு

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டிற்கு பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. 

கிராமப்புற பள்ளி, சுகாதார நிலையங்களுக்கு இலவச இணையதள சேவை - பட்ஜெட்டில் அறிவிப்பு

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மற்றும் கல்வி நிலையங்களில் இலவச இணைய சேவை வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

வீட்டு வாடகை டிடிஎஸ் 6 லட்சம் ரூபாயாக உயர்வு - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Budget 2025: வீட்டு வாடகை டிடிஎஸ் 6 லட்சமாக உயர்த்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது - தயாநிதி மாறன் கருத்து

Budget 2025: மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் கருத்து தெரிவித்துள்ளார். 

நடுத்தர மக்களின் வாழ்க்கை மேம்படுத்துதல், வளர்ச்சியை உறுதி செய்யும் பட்ஜெட் - நிர்மலா சீதாராமன்

நடுத்தர மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் வளர்ச்சியை உறுதி செய்தலை நோக்கமாக கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

எல்.இ.டி. பேனர்களுக்கான சுங்கவரி 20 சதவீதம் வரி உயர்வு

எல்.இ.டி. பேனர்களுக்கான சுங்கவரி 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாத ஊதியம் 1 லட்சம் ரூபாய் வரை உள்ளபவர்களுக்கு வருமான வரி கிடையாது

மாத ஊதியம் 1 லட்சம் ரூபாய் வரை பெறுபவர்கள் இனி வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாத ஊதியம் 1 லட்சம் ரூபாய் வரை உள்ளபவர்களுக்கு வருமான வரி கிடையாது

மாத ஊதியம் 1 லட்சம் ரூபாய் வரை பெறுபவர்கள் இனி வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு பிரத்யேக அறிவிப்பு இல்லை - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 1.15 மணி நேர பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு பிரத்யேக அறிவிப்பும் வெளியாகவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு பிரத்யேக அறிவிப்பு இல்லை - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 1.15 மணி நேர பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு பிரத்யேக அறிவிப்பும் வெளியாகவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் வரை உள்ளபவர்களுக்கு வருமான வரி கிடையாது - நிர்மலா அறிவிப்பால் மக்கள் இன்ப அதிர்ச்சி

வருமான வரி விலக்கு உச்சவரம்பு 12 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

முதியோருக்கான வட்டி வருவாயில் 1 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது - நிர்மலா சீதாராமன்

Budget 2025: முதியோருக்கான வட்டி வருவாயில் 1 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

லித்தியம் பேட்டரிக்கு சுங்கவரி ரத்து; மின்சார கார், மின்சார பைக் விலை குறைய வாய்ப்பு

Budget 2025: லித்தியம் பேட்டரிக்கு சுங்கவரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எலக்டரிக் வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.

லித்தியம் பேட்டரிக்கு சுங்கவரி ரத்து; மின்சார கார், மின்சார பைக் விலை குறைய வாய்ப்பு

லித்தியம் பேட்டரிக்கு சுங்கவரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எலக்டரிக் வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.

அந்நிய நேரடி முதலீட்டிற்கு 100 சதவீதம் அனுமதி - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Budget 2025: இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு 100 சதவீதம் அனுமதி அளிப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

அந்நிய நேரடி முதலீட்டிற்கு 100 சதவீதம் அனுமதி - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Budget 2025: இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு 100 சதவீதம் அனுமதி அளிப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

புதிய வருமான வரிச்சட்டம் அடுத்த வாரம் தாக்கல் - நிர்மலா அறிவிப்பால் எகிறும் எதிர்பார்ப்பு

அடுத்த வாரம் புதிய வருமான வரிச்சட்டம் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

அடுத்த 10 ஆண்டுகளில் 100 விமான நிலையங்கள் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Budget 2025: அடுத்த 10 ஆண்டுகளில் 100 புதிய விமான நிலையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

2033ம் ஆண்டிற்குள் புதியதாக 5 அணு உலைகள் - நிர்மலா சீதாராமன்

2033ம் ஆண்டிற்குள் நாட்டில் புதியதாக 5 அணு உலைகள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல்! பீகாருக்கு அடுத்தடுத்து திட்டங்கள்!

பீகார் மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய பட்ஜெட்டில் பீகாருக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 

ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி ஊழியர்களுக்கு காப்பீடு திட்டம் - மத்திய நிதியமைச்சர்

Budget 2025: உணவு விநியோகம் உள்ளிட்ட டெலிவரி ஊழியர்களுக்கு காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அவர்களுக்கு என்று தனித இணையதளம் தொடங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

நடப்பாண்டிற்குள் நாடு முழுவதும் 200 புற்றுநோய் சிகிச்சை மையங்கள் - மத்திய நிதியமைச்சர்

புற்றுநோயாளிகளுக்காக 200 அரசு மருத்துவமனைகளில் பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதுவும் நடப்பாண்டிற்குள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

விவசாயிகள் பெறும் கடனுக்கான வட்டி மானியம் 5 ஆயிரமாக அதிகரிப்பு - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

Budget 2025: விவசாயிகள் பெறும் கடனுக்கான வட்டி மானியம் 3 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 5 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 20 கோடி ரூபாய் வரை கடனுக்கு மானியம் - நிர்மலா சீதாராமன்

Budget 2025: ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 20 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு மானியம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

சிறு, குறு தொழில்துறையினருக்கு கிரெடிட் கார்டு -நிர்மலா சீதாராமன்

Budget 2025: சிறு, குறு தொழில்துறையினருக்கு கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலில் தெரிவித்துள்ளார். 

சிறு, குறு தொழில்துறையினருக்கு கிரெடிட் கார்டு -நிர்மலா சீதாராமன்

Budget 2025: சிறு, குறு தொழில்துறையினருக்கு கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலில் தெரிவித்துள்ளார். 

நாட்டின் வளர்ச்சிக்கு சக்தி வாய்ந்த 4 இன்ஜின்கள் - நிர்மலா சீதாராமன்

Budget 2025: விவசாயம், சிறுகுறு தொழில்கள், முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கான சக்தி வாய்ந்த இன்ஜின்கள் என்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலில் கூறியுள்ளார். 

தாக்கல் ஆகிய மத்திய பட்ஜெட்! வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்!

Budget 2025: மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகியுள்ள நிலையில், பட்ஜெட்டிற்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். 

தாக்கல் ஆகிய மத்திய பட்ஜெட்! வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்!

Budget 2025: மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகியுள்ள நிலையில், பட்ஜெட்டிற்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். 

தாக்கல் ஆகிய மத்திய பட்ஜெட்! வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்!

Budget 2025: மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகியுள்ள நிலையில், பட்ஜெட்டிற்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். 

பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு முக்கியத்துவம்? நிர்மலா சீதாராமன் விளக்கம்

Budget 2025 Live: 6 துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. வரி, ஆற்றல் துறை, நகர வளர்ச்சி, கனிமவளம், நிதித்துறை , ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

Budget 2025 Live: அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவிற்கு முக்கிய வாய்ப்புகள்

Budget 2025 Live: அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவிற்கு முக்கிய வாய்ப்புகள் உலகளவில் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

Budget 2025 Live: அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவிற்கு முக்கிய வாய்ப்புகள்

Budget 2025 Live: அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவிற்கு முக்கிய வாய்ப்புகள் உலகளவில் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

Budget 2025 Live: அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவிற்கு முக்கிய வாய்ப்புகள்

Budget 2025 Live: அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவிற்கு முக்கிய வாய்ப்புகள் உலகளவில் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

மத்திய பட்ஜெட்டில் 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம் - நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டில் 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Budget 2025 LIVE: தாக்கல் ஆகியது மத்திய பட்ஜெட்! எதிர்க்கட்சிகள் அமளி

Budget 2025 LIVE: மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளி செய்து வருகின்றனர். 

தொடங்கிய பட்ஜெட்; எதிர்க் கட்சிகள் அமளி!

மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்து வரும் நிலையில், எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

Budget 2025 Live: சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Budget 2025 Live: இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

ஒப்புதல் அளித்த மத்திய அரசு

2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டிற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Budget 2025 Live Tamil: பொருளாதாரத்தை மீட்குமா பட்ஜெட்?

Budget 2025 Live Tamil: கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவில், இந்தியாவின் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது. இதையடுத்து பொதுமக்களின் வாங்கும் திறனை ஊக்குவிக்கும் வகையிலான, அறிவிப்புகளை வெளியிட்டு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Budget 2025 Live Tamil: அமைச்சரவை கூட்டத்தில் நிதியமைச்சர்

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமயில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. அதில் பட்ஜெட் ஆவணங்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றுள்ளார்.

நிலையான விலக்கு வரம்பு அதிகரிப்பு

Budget 2025 Live Updates:  கடந்த ஆண்டு, அரசு நிலையான விலக்கு வரம்பை ரூ.50,000 லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தியது. புதிய வரி விதிப்பு முறை வரி செலுத்துவோருக்கு அதிக லாபம் தரும் வகையில் இந்த வரம்பை 1,00,000 ரூபாயாக அரசாங்கம் மேலும் விரிவுபடுத்தலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்

வரி அடுக்குகளில் மாற்றம்?

Budget 2025 Live Tamil: புதிய வரி முறையின் கீழ் அரசாங்கம் வரி அடுக்குகளை திருத்தலாம் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக 30% வரி ஸ்லாப்பை தற்போதுள்ள வருமானம் ரூ.15,00,000க்கு பதிலாக ரூ.20,00,000க்கு மேல் வருமானமாக மாற்றும்.

பிரிவு 87A தள்ளுபடி வரம்பு உயருமா?

Budget 2025 Live: தற்போது, ​​7,00,000 ரூபாய் வரையிலான வருமானம் மீது பிரிவு 87A இன் கீழ் வரி தள்ளுபடி 100% ஆகும். புதிய வரி விதிப்பின் கீழ் வருமான வரம்பு ரூ.8,00,000 ஆக உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் தனிப்பட்ட பங்களிப்பு?

Budget 2025 Live Updates:  தற்போதைய நிலவரப்படி, புதிய வரி விதிப்பு முறையின் கீழ் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) முதலாளியின் பங்களிப்பு மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் NPSக்கான சுய பங்களிப்பு சேர்க்கப்படவில்லை. புதிய வரிமுறையின் கீழ் வரிச் சலுகைகளை நீட்டிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம். பழைய வரி விதிப்பில் இது ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடிப்படை விலக்கு வரம்பு உயருமா?

Budget 2025 Live Updates: தற்போது, ​​புதிய வரி விதிப்பின் கீழ் அடிப்படை விலக்கு வரம்பு ரூ.3,00,000 ஆகும். அரசாங்கம் இந்த வரம்பை ரூ.5,00,000 ஆக உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வரி செலுத்துவோருக்கு அதிக செலவழிப்பு வருமானத்தை வழங்கும். இதனால், வாங்கும் திறன் அதிகரித்து, தேவையை அதிகப்படுத்தும். அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

Budget 2025 Live: பட்ஜெட் எதிரொலி! ஏறுமுகத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை!

Budget 2025 Live: பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தை இன்று காலையிலே ஏறுமுகத்துடன் தொடங்கியுள்ளது.

Budget 2025 Live: பட்ஜெட் எதிரொலி! ஏறுமுகத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை!

Budget 2025 Live: பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தை இன்று காலையிலே ஏறுமுகத்துடன் தொடங்கியுள்ளது.

Budget 2025 Live Tamil: சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல்! ரூபாய் 62 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை!

இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், தங்கத்தின் விலை 62 ஆயிரத்திற்கு சவரன் விற்கப்பட உள்ளது. 

Budget 2025 Live: குடியரசுத் தலைவரைச் சந்தித்தார் நிர்மலா சீதாராமன்!

பட்ஜெட் 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ள நிலையில், நிதியமைச்சக அதிகாரிகளைச் சந்தித்த பிறகு நிர்மலா சீதாராமன் தற்போது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவைச் சந்தித்தார் நிர்மலா சீதாராமன்.

Budget 2025 Live: நிதியமைச்சகம் வந்தார் நிர்மலா சீதாராமன்! 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல்!

Budget 2025 Live: பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சகம் வந்தார்.

Budget 2025 Live: மத்திய பட்ஜெட் 2025: அதிக நிதி ஒதுக்கப்படுமா? தமிழக மக்கள் எதிர்பார்ப்பு

Budget 2025 Live:மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதிகளவு நிதி ஒதுக்கப்படுமா? என்று தமிழக மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 

Budget 2025 Live: பட்ஜெட் தாக்கல்: இந்திய பங்குச்சந்தை உச்சம் பெறுமா?

Budget 2025 Live: மத்திய அரசு இன்று தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை அறிக்கை காரணமாக இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

Budget 2025 Live: ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு

Budget 2025 Live: நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமான ஏஐ தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Budget 2025 Live: மத்திய பட்ஜெட்டில் தொழில்நுட்பத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடா?

Budget 2025 Live: இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் தொழில்நுட்ப வசதிக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

Background

Union Budget 2025 LIVE Updates in Tamil:


ஒட்டுமொத்த நாடே எதிர்பார்க்கும் 2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செயயப்பட இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


மத்திய நிதிநிலை அறிக்கை:


இதற்கான பணிகள் ஏற்கனவே விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய நிதிநிலை அறிக்கையைப் பொறுத்து நாடு முழுவதும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களின் விலைகள் ஏற்றத்தையும், இறக்கத்தையும் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தொலைநோக்கு சிந்தனையுடன் இந்த பட்ஜெட் இருக்கும் என்று பா.ஜ.க. நிர்வாகிகளும், பா.ஜ.க. ஆதரவாளர்களும் கணித்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பது வருமான வரியில் மாற்றத்தையே பெரிதும் எதிர்பார்க்கின்றனர். 


பெரும் எதிர்பார்ப்பு:


இந்த பட்ஜெட்டில் வருமான வரி கணக்கு தாக்கல் நடைமுறையில் பெரும் மாற்றங்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிவியல், விண்வெளி, பாதுகாப்பு போன்ற அம்சங்களுக்காக தொலைநோக்கு பார்வையுடன் அதிக நிதி ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும், மக்களின் அத்தியாவசியம் மற்றும் அடிப்படையான கல்வி, விவசாயம், சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு பெரும் அளவு நிதி ஒதுக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.