இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, இன்று அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி மூன்றாவது டெஸ்ட்டில் களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன் படி இந்திய அணி பேட்டிங்கினைத் தொடங்கியது. இந்திய அணிக்கு தொடக்கம் மிகவும் சொதப்பலாக அமைந்தது. இந்திய அணியின் இளம் வீரர்களான ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ரஜித் படிதார் ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து வெளியேறினர். 


சதம் விளாசிய ரோஹித் சர்மா தனது விக்கெட்டினை இழந்து வெளியேற, அதன் பின்னர் களத்திற்கு வந்தார் சர்ஃப்ராஸ் கான். இவருக்கு இதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டி. இந்த போட்டியில் களமிறங்கிய சர்ஃப்ராஸ் கான் இங்கிலாந்து அணியின் பந்து விச்சினை மிகச் சிறப்பாக எதிர் கொண்டது மட்டும் இல்லாமல், இங்கிலாந்து அணிக்கு சவாலையும் ஏற்படுத்தினார். சிறப்பாக விளையாடிய சர்ஃப்ராஸ் கான் 48 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டினார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது அறிமுகப் போட்டியில் அரைசதம் விளாசி இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளது மட்டும் இல்லாமல் இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளார். 


சதம் விளாசிய ரோகித் சர்மா தனது விக்கெட்டினை இழந்து களத்தில் இருந்து வெள்யேறினார். அப்போது களத்திற்கு வந்த சர்ஃப்ராஸ் கானை ரோகித் சர்மா தட்டிக் கொடுத்தார். சர்ஃப்ராஸ் கான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டதுமே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையாக இருந்தது. 


சிறப்பாக விளையாடிக் கொண்டு இருந்த சர்ஃப்ராஸ்கான் தனது விக்கெட்டினை எதிர்பாராத விதமாக இழந்து வெளியேறினார். அதாவது 99 ரன்களில் இருந்த ஜடேஜா 100வது ரன்னை எடுக்க மிட் ஆன் திசையில் பந்தைத் தட்டிவிட்டு ரன் எடுக்க ஓட முயற்சி செய்துவிட்டு பின் வாங்கினார். நான் - ஸ்ட்ரைக்கர் திசையில் இருந்த சர்ஃப்ராஸ் கான் ரன் எடுக்க கிரீஸை விட்டு வெளியே வந்துவிட்டு மீண்டும் கிரீஸ்க்குள் செல்வதற்குள் மார்க் வுட்டால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால் சிறப்பாக விளையாடி வந்த சர்ஃப்ராஸ் கான் 66 பந்தில் 62 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 


சர்ஃப்ராஸ் கான் தனது விக்கெட்டினை இழந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் தான் அணிந்திருந்த தொப்பியை மிகவும் ஆக்ரோஷமாக கழட்டி வீசினார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 




Rohit Sharma Century: தொடக்கத்தில் சரிந்த விக்கெட்டுகள்; 370 நாட்களுக்குப் பின்னர் சொந்த மண்ணில் சதம் விளாசிய ரோஹித் சர்மா