IND Vs ENG 3rd T20: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி, ராஜ்கோட்டில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.


முன்னிலயில் இந்திய அணி:


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரையில் நடந்து முடிந்துள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, இந்தியா தற்போது 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் தான், இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. இதில் வென்று தொடரை கைப்பற்ற இந்தியாவும், முதல் வெற்றியை ருசித்து தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இங்கிலாந்தும் ஆர்வம் காட்டுகிறது. இதனால், இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



ராஜ்கோட்டில் மூன்றாவது டி20 போட்டி:


இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி, ராஜ்கோட்டில் உள்ள மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும் கண்டு களிக்கலாம். அதேநேரம், ஹாட் ஸ்டார் செயலியிலும் போட்டி நேரலையில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.


இந்தியாவின் பலம், பலவீனம்:


இந்திய அணியை பொறுத்தமட்டில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு, பெரும் பலமாக உள்ளது. அதோடு, எந்தவொரு தனிநபரையும் சார்ந்திருக்காமல், அணியின் கூட்டு முயற்சியால் வெற்றி வசமாகி வருகிறது. உதாரணமாக முதல் போட்டியில் வருண் சக்ரவத்தி மற்றும் அபிஷேக் சர்மா அபாரமாக செயல்பட்டனர். ஆனால், இரண்டாவது போட்டியில் திலக் வர்மா அணியை வெற்றிக்கு வழிநடத்தினார். இதேநிலை தொடர்ந்தால் இன்றைய போட்டியிலும் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும் முதல் இரண்டு போட்டியிலும் பெரிதும் சோபிக்காத, கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர், ரன் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மறுபுறம் இங்கிலாந்து அணியோ கடந்த போட்டியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தும் அதை சாத்தியப்படுத்தாமல் கோட்டை விட்டது. இதனால், இன்றைய போட்டியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.


ராஜ்கோட் மைதானம் எப்படி?


ராஜ்கோட் மைதானத்தின் மேற்பரப்பு வேகமான அவுட்பீல்டு மற்றும் குறுகிய பவுண்டரி எல்லைகளுடன் பேட்டிங் செய்ய நன்றாக இருக்கும். பேட்ஸ்மேன்கள் கோலோச்ச அதிக வாய்ப்புள்ளது. எனவே, இந்த மைதானத்தில் இரு அணிகளும் சேஸிங்கை விரும்புவார்கள்.


உத்தேச பிளேயிங் லெவன்:


இந்தியா: பாண்டியா , அக்சர் படேல் , வாஷிங்டன் சுந்தர் , அர்ஷ்தீப் சிங் , சாம்சன் ( wk ) , திலக் வர்மா , சூர்யகுமார் யாதவ் (C) , அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் , வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய்


இங்கிலாந்து:  சால்ட் ( wk ), ஜோஸ் பட்லர் (சி) , ஜேஎல் ஸ்மித் , ஹாரி புரூக் , பிஎம் டக்கெட் , எல்எஸ் லிவிங்ஸ்டோன் , ஜே ஓவர்டன் , ஜோஃப்ரா ஆர்ச்சர் , ஏயு ரஷித் , பிஏ கார்ஸ் , மார்க் வூட்