IND Vs Eng 2nd Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போடிட்யில் வென்றதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-1 என சமன் செய்துள்ளது.

இந்திய அணி அபார வெற்றி:

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், எட்க்பஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், கில் தலைமையிலான இளம் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 1-1 என சமன் செய்துள்ளதோடு, டெஸ்ட் போட்டியில் இதுவரை நிகழ்த்திடாத பல அரிய சாதனைகளையும் இந்தியா வசப்படுத்தியுள்ளது. இதற்கு கேப்டன் கில் இரண்டு இன்னிங்ஸிகளிலும் முறையே 269 மற்றும் 161 ரன்கள் குவித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. பந்து வீச்சில் ஆகாஷ் தீப், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

2வது டெஸ்ட் - படைக்கப்பட்ட சாதனைகள்:

  • இந்திய டெஸ்ட் அணியில் மிக இளம் வயதில் வெற்றியை ருசித்த நான்காவது கேப்டனாக கில் (25) உருவெடுத்துள்ளார்
  • எட்க்பஸ்டன் மைதானத்தில் 58 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் விளையாடினாலும், இந்தியா பதிவு செய்த முதல் வெற்றி இதுவாகும்
  • எட்க்பஸ்டன் மைதானத்தில் டெச்ட் போட்டியில் வெற்றி பெற்ற முதல் ஆசிய என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது
  • எட்க்பஸ்டன் மைதானத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ள இந்திய அணிக்கும் வெளிநாட்டு மண்ணில் பதிவு செய்த மிகப்பெரிய வெற்றியும் இதுவாகும்
  • ரன்கள் அடிப்படையில் இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து பதிவு செய்த இரண்டாவது மிகப்பெரிய தோல்வி இதுவாகும்
  • ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்ற கோலியின் (269 ரன்கள்) சாதனையை கில் (430 ரன்கள்) முறியடித்துள்ளார். இதுபோக, ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் சேர்த்த இந்திய வீரர் என்ற கவாஸ்கரின் (344) சாதனையையும் கில் தவிடுபொடியாக்கியுள்ளார்.
  • ஒரு டெஸ்ட் போட்டியிலேயே சதம் மற்றும் இரட்டை சதம் விளாசிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை மட்டுமின்றி, ஒரு போட்டியிலேயே 250 மற்றும் 150 ரன்கள் சேர்த்த முதல் வீரர் என்ற சாதனையையும் கில் படைத்துள்ளார்
  • இந்திய கேப்டனால் ஒரு டெஸ்ட் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் என்ற கோலியின் (254* ரன்கள்) சாதனையையும், இங்கிலாந்தில் இந்திய வீரரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்ற கவாஸ்கரின் (221 ரன்கள்) என்ற சாதனையையும் கில் படைத்துள்ளார்.
  • வெளிநாட்டு டெஸ்டில் ஒரு போட்டியில் அதிக ரன் சேர்த்த இந்திய கேப்டன் என்ற கோலியின் (200 ரன்கள்) சாதனையையும் கில் வசப்படுத்தியுள்ளார்
  • சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, விரேந்திர சேவாக் மற்றும் க்றிஸ் கெயிலை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை கில் பெற்றுள்ளார்
  • முதல் இன்னிங்ஸில் ஜேமி ஸ்மித் 184 ரன்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்து விக்கெட் கீப்பரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 80 பந்துகளில் சதம் விளாசியதன் மூலம், இங்கிலாந்து வீரரின் அதிவேகமான மூன்றாவது சதமாகவும் இடம்பெற்றுள்ளது.
  • முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர்கள் 6 பேர் டக்-அவுட்டாகியுள்ளனர். இந்த மோசமான சாதனையை படைத்த 9வது அணியாக இங்கிலாந்து உருவெடுத்துள்ளது
  • ஹாரி ப்ரூக் மற்றும் ஜேமி ஸ்மித் முதல் இன்னிங்ஸில் 303 ரன்கள் சேர்த்து, டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக 6வது விக்கெட்டில் அதிக ரன்கள் சேர்த்த ஜோடியாக உருவெடுத்துள்ளது

அடுத்த டெஸ்ட் எப்போது?

இளம் கேப்டன் கில் தலைமையில் பெற்ற வெற்றி ஒட்டுமொத்த இந்திய அணியையும் உற்சாகப்படுத்தியுள்ளது. இதே உத்வேகத்துடன் செயல்பட்டு தொடரை கைப்பற்றவும் தீவிரம் காட்டுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றவாது டெஸ்ட் போட்டி, வரும் 10ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது.