IND vs ENG 2nd T20I:அதிரடி காட்டிய திலக் வர்மா; டி-20 போட்டியில் இந்தியா அணி த்ரில் வெற்றி!
IND vs ENG 2nd T20I: 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IND vs ENG 2nd T20I highlights: இங்கிலாந்து எதிரான 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - இங்கிலாந்து டி-20 தொடர்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி-20 போட்டி சென்னை சேப்பாகம் எம்.ஏ. சிதம்ப்ரம் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி:
கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து இந்தியாவிற்கு இலக்கு நிர்ணயித்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 45 ரன்களும், ஸ்மித் 22 ரன்களும் எடுத்தனர்.இந்திய அணியில் பவுலர்கள் அக்சர் படேல் , வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், அபிசேக் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்தியா பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர்.
இதனையடுத்து 166 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சஞ்சு சாம்சன் (5 ரன்) மற்றும் அபிசேக் சர்மா (12 ரன்) இருவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். அவர்களுக்கு அடுத்து வஎத சூர்ய குமார் யாதவ், துருவ் ஜுரெல் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் பெரிதாக ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியின் திரும்பினர்.
ஆனால், வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டானார்கள். திலக் வர்மா கடைசி வரை நின்று 72 ரன்கள் எடுத்தார். அவருக்கு வாஷிங்டன் சுந்தர் துணை நின்று 26 ரன்கள் சேர்த்தார். அபிசேக் ஷர்மா 12, சஞ்சு சாம்சன் 5, சூர்யகுமார் யாதவ்12, ரன்கள் எடுத்தனர். பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோயுடன் களத்தில் அதிரடி காட்டிய திலக் வர்மா கடைசி ஓவரில் பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தனி ஒரு ஆளாய் எதிர்கொண்ட திலக் வர்மா, 55 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரியுடன் 72 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ரவி பிஷ்னோய் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
விறுவிறுப்பான ஆட்டத்தில் 19.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் கஎடுத்து இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பெற்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.