2025 ஆண்டில், மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பத்ம விபூஷன் விருது 7 நபர்களுக்கும் , பத்ம பூசன் விருது 19 நபர்களுக்கும், பத்ம ஸ்ரீ விருது 113 நபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருதை அறிவித்துள்ளது ,மத்திய அரசு. மேலும், நடிகரும்-கார் ரேசருமான அஜித்துக்கு பத்ம பூஷசன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது; சமயற்கலை நிபுணர் தாமுவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தெரிவித்த அஜித்
இந்நிலையில் , விருது பெற்றமை குறித்து நடிகர் அஜித் தெரிவித்ததாவது, “இந்தியக் குடியரசுத் தலைவரால் மதிப்பிற்குரிய பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.
மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் இத்தகையை அங்கீகாரம் ஒரு பாக்கியம் மற்றும் நமது தேசத்திற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
அதே நேரத்தில், இந்த அங்கீகாரம் தனிப்பட்ட பாராட்டு மட்டுமல்ல, பலரின் கூட்டு முயற்சிகள் மற்றும் ஆதரவின் சான்றாகும் என்பதை நான் நினைவில் கொள்கிறேன், என அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் பார்க்க Happy Republic Day 2025 Images: குடியரசு தின வாழ்த்து சொல்வோமா.! டாப் 10 சிறந்த புகைப்படங்கள்..
139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முழு பட்டியலுக்கு இதை கிளிக் செய்யவும் : 2025 பத்ம விருதுகள் பெற்றவர்கள்
இதுகுறித்து , பிரதமர் மோடி தெரிவித்த வாழ்த்து பதிவில்,
2025 ஆம் ஆண்டு பத்ம விருது பெற்ற அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார். ஒவ்வொரு விருது பெறுபவரும் கடின உழைப்பு, ஆர்வம் மற்றும் புத்தாக்கத்திற்கு இணையானவர்கள், இது எண்ணற்றவர்களின் வாழ்க்கையில் உத்வேகத்தை அளித்துள்ளது என்று குறிப்பிட்டார்.
“பத்ம விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! அவர்களின் அசாதாரண சாதனைகளை கௌரவிப்பதிலும், கொண்டாடுவதிலும் இந்தியா பெருமிதம் கொள்கிறது. அவர்களின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன. ஒவ்வொரு விருது பெறுபவரும் கடின உழைப்பு, ஆர்வம் மற்றும் புதுமைகளுக்கு இணையாக இருக்கிறார்கள்.
இது எண்ணற்ற வாழ்க்கையை சாதகமாக பாதித்துள்ளது. சிறந்து விளங்க பாடுபடுதல் மற்றும் தன்னலமின்றி சமுதாயத்திற்கு சேவை செய்வதன் மதிப்பை அவை நமக்குக் கற்பிக்கின்றன என பிரதமர் மோடி தெவித்துள்ளார்.