பாகிஸ்தான் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை நோமன் அலி பெற்றுள்ளார். 

டெஸ்ட் போட்டி: 

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முல்தான் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் ஜெயித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் ஆரம்பமே மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அறிமுக வேகப்பந்து வீச்சாளர் காசிஃப் அலி மற்றும் சஜித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். 

நோமன் அலி அசத்தல்: 

38 வயதான நோமன் அலி தனது முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து அசத்தினர். அதன் பிறகு 12வது ஓவரில் பந்து வீசிய அவர் ஜஸ்டின் கிரீவ்ஸ் (1), டெவின் இம்லாச் (0),கெவின் சின்க்ளேர் (0) ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்து சாதனை படைத்தார். 

பாகிஸ்தான் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை நோமன் அலி பெற்றுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த ஐந்தாவது வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இந்த அரிய சாதனையை எட்டியுள்ளனர். இதன் மூலம் ஹாட்ரிக் எடுத்த ஆறாவது பாகிஸ்தான் வீரரானர். மேலும் சொந்த மண்ணில் இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது பாகிஸ்தான் வீரர் நோமன் ஆவார். ஆசிய நாடு அல்லாத வேறு நாட்டிற்கு எதிராக இந்த சாதனையை நிகழ்த்திய முதல் பாகிஸ்தான் பந்து வீச்சாளர் என்கிற பெருமையை நோமன் நிகழ்த்தினார்.

இதையும் படிங்க: Chennai Traffic Diversion: வீக் எண்ட் கஷ்டங்கள்..! சென்னையில் 2 நாட்களுக்கு போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள், எங்கெல்லாம் தெரியுமா?

ஹாட்ரிக் எடுத்த பாக் வீரர்கள்:

வீரர் எதிரணி ஆண்டு இடம்
வாசிம் அக்ரம் இலங்கை 1999 லாகூர்
வாசிம் அக்ரம் இலங்கை 1999 டாக்கா
அப்துல் ரசாக் இலங்கை 2000 காலி
முகமது சாமி இலங்கை 2002 லாகூர்
நசீம் ஷா பங்களாதேஷ் 2020 ராவல்பிண்டி
நோமன் அலி வெஸ்ட் இண்டீஸ் 2025 முல்தான்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த இரண்டாவது வயதான பந்துவீச்சாளர் (38 வயது, 110 நாட்கள்) என்ற பெருமையையும் நோமன் பெற்றுள்ளார். அவர் ரங்கனா ஹெராத்தின் (38 வயது, 139 நாட்கள்) உலக சாதனையை வெறும் 29 நாட்களில் தவறவிட்டார். ஆடம் வோஜஸ், பீட்டர் நெவில் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரின் விக்கெட்டுகளுடன் 2016 ஆம் ஆண்டு காலேயில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கைக்காக ஹெராத் அந்த சாதனையை படைத்தார்.

அக்டோபரில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பியதில் இருந்து உள்நாட்டில் நடைப்பெறும் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி பெறுவதில் நோமன் அலி முக்கிய பங்கு வகித்தார். அக்டோபர் 2024 முதல்,  நான்கு போட்டிகளில் (7 இன்னிங்ஸ்) 30 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில் ஐசிசியின் சிறந்த வீரர் விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.