IND Vs ENG 2nd T20: இந்தியாவின் வெற்றி தொடருமா? சேப்பாக்கம் கை கொடுக்குமா? இங்கிலாந்து உடன் இன்று 2வது டி20 போட்டி

IND Vs ENG 2nd T20: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Continues below advertisement

IND Vs ENG 2nd T20: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி, உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

Continues below advertisement

இந்தியா Vs இங்கிலாந்து டி20 தொடர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இன்று நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகின்றன.

சேப்பாக்கத்தில் டி20 போட்டி

சென்னை சேப்பாக்கத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கும் டி20 போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். இதில் வென்று தொடரில் வலுவான முன்னிலை பெற இந்தியாவும், 1-1 என சமன் செய்ய இங்கிலாந்தும் தீவிரம் காட்டுகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும் கண்டு களிக்கலாம். அதேநேரம், ஹாட் ஸ்டார் செயலியிலும் போட்டி நேரலையில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.

இரு அணிகளின் நிலவரம்:

பேட்டிங்கில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதே நிலை தொடர்ந்தால் இன்றைய போட்டியிலும் அதிரடி காட்ட முடியும். கடந்த போட்டியில் சொதப்பிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் ஜொலித்தாக வேண்டும். பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா மற்றும் வருண் சக்ரவர்த்தி நல்ல எதிரணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகம் என்பதால், வருண் சக்ரவர்த்தி இன்றும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் இந்திய வீரர்களுக்கு சாதகமாக இருக்கும். இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் பந்துவீச்சு நல்லபடியாக இருந்தாலும், கடந்த போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியதே அவர்களின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதனால் இன்றைய போட்டியில் பேட்ஸ்மேன்கள் ஜொலிக்க வேண்டியது அவசியம்.

சேப்பாக்கம் மைதானம் எப்படி?

சென்னையின் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும் என அனைவரும் அறிந்ததே. அதேநேரம், தொடக்கத்தில் நிலைத்து நின்று ஆடினால் பின்னர் பேட்ஸ்மேன்களும் ரன்களை குவிக்கலாம். போட்டியின் முடிவைத் தீர்மானிப்பதில் பனி ஒரு பெரிய காரணியாக இருக்காது, அதே சமயம் சமீப ஆண்டுகளில் இருந்த போக்கை விட, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக பிட்ச் ஃபிளாட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங் செய்வதையே விரும்பும்

சேப்பாக்கம் இந்தியாவிற்கு சாதகமா?

சேப்பாக்கம் மைதானம் என்று அழைக்கப்படும் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில்,  இதுவரை 2 சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.  அதில், ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணியும், மற்றொரு போட்டியில் சேஸ் செய்த அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதில் இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியும் தோல்வியும் கண்டுள்ளது. கடைசியாக இந்த மைதானத்தில் நவம்பர் 2018ம் ஆண்டு,  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் இந்தியா விளையாடியது. அதில் ஷிகர் தவான் மற்றும் ரிஷப் பண்டின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது.

உத்தேச பிளேயிங் லெவன்:

இந்தியா: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன்(w), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ்(c), ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி

இங்கிலாந்து: பென் டக்கெட், பிலிப் சால்ட்(w), ஜோஸ் பட்லர்(c), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வூட்

 

Continues below advertisement