லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில சாஹல் சுழலில் சிக்கி இங்கிலாந்தின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஜோ ரூட், ஜானி பார்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி அவுட்டாகினார். லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் முதன் முறையாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற மகத்தான சாதனையை சாஹல் இன்று படைத்துள்ளார்.




1983ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் அமர்நாத் 12 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இன்று வரை லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய வீரர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சாக இருந்து வந்தது. 29 ஆண்டுகள் கழித்து மொகிந்தர் அமர்நாத்தின் மாபெரும் சாதனையை இன்று சாஹல் தனது சுழலால் தகர்த்துள்ளார்,






சாஹலுக்கு அடுத்த இடத்தில் அமர்நாத்தும், அவருக்கு அடுத்த இடத்தில் நெஹ்ரா ( 3-26), அவருக்கு அடுத்தபடியாக ஹர்பஜன்சிங் ( 3-28), மதன்லால் (3-31) , யுவராஜ்சிங் (3-39), ஆர்.பி.சிங் (3-62), குல்தீப் யாதவ் (3-68) ஆகியோர் உள்ளனர்.




இந்த போட்டியில்  சாஹல் மொத்தம் 10 ஓவர்கள் வீசி 47 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உலகப்புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் மாபெரும் சாதனை படைத்த சாஹலுக்கு கிரிக்கெட் ரசிகர்களும், வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சாஹல் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட ஆடாமல் ஒருநாள் போட்டியில் 100க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : IND vs ENG, ODI : சாஹலிடம் சரணடைந்த இங்கிலாந்து..! மொயின், டேவிட் வில்லி அசத்தல்..! இந்தியாவிற்கு 247 ரன்கள் இலக்கு..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண