இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் சட்டீஸ்வர் புஜாரா. டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்றே முத்திரை குத்தப்பட்ட புஜாரா இந்தியா ஆடும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் தவிர்க்க முடியாத வீரராக உள்ளார். எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் ஆடிய புஜாராவிற்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.





இந்த நிலையில், புஜாரா இங்கிலாந்து நாட்டில் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறார். இதில் சசெக்ஸ் அணிக்கும் லீசெஸ்டர்ஷையர் அணிக்கும் இடையே நடைபெற்று வரும் போட்டியில் புஜாரா ஆடி வருகிறார். இதில் சசெக்ஸ் அணிக்காக புஜாரா களமிறங்கியுள்ளார். லீசெஸ்டர்ஷையர் அணி முதல் இன்னிங்சில் 756 ரன்களை குவித்தது.






அந்த அணி வீரர்களை அவுட்டாக்க முடியாததால் புஜாரா பந்துவீச அழைக்கப்பட்டார். இதுவரை சர்வதேச போட்டிகளில் பேட்ஸ்மேனாக மட்டுமே பார்க்கப்பட்ட புஜாரா முதன்முறையாக லெக் ஸ்பின்னர் அவதாரம் எடுத்தார். அவர் ஒரு ஓவர் மட்டுமே வீசி 8 ரன்கள் கொடுத்தார். தொடர்ந்து அவர் பந்துவீசுவாரா? விக்கெட் வீழ்த்துவாரா? என்பது உணவு இடைவேளைக்கு பிறகே தெரியும்.




புஜாரா பந்துவீசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, சசெக்ஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 588 ரன்களை குவித்தது. புஜாரா 46 ரன்கள் எடுத்தார். 96 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள புஜாரா இதுவரை ஒரே ஒரு முறை மட்டும் ஒரு ஓவர் வீசியுள்ளார்.  


புஜாரா இதுவரை இந்திய அணிக்காக  96 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6 ஆயிரத்து 792 ரன்களை குவித்துள்ளார். அதில் 18 சதங்களும், 3 இரட்டைசதங்களும், 33 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 206 ரன்கள் குவித்துள்ளார். 5 ஒருநாள் போட்டியில் மட்டுமே ஆடியுள்ள புஜாரா 51 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.  


மேலும் படிக்க : IND vs ENG 2nd ODI: காயத்தில் இருந்து மீண்ட கோலி..! ஆடும் லெவனில் மீண்டும் வந்ததால் ரசிகர்கள் உற்சாகம்..!


மேலும் படிக்க : IND vs WI T20 Squad: கோலி, பும்ரா இல்லை: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.