இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு இங்கிலாந்து அணி 111 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்தது. எளிய இலக்கை நோக்கி இந்தியாவின் கேப்டன் ரோகித்சர்மாவும், ஷிகர்தவானும் களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலே கிடைத்த சுலபமான ரன் அவுட் வாய்ப்பை இங்கிலாந்து வீரர்கள் நழுவவிட்டனர்.




இதன்பின்னர், ரோகித்சர்மாவும், ஷிகர்தவானும் வாய்ப்பே அளிக்காமல் நிதானமாக ஆடினர். ஷிகர்தவான் பொறுமையாக ஆட கேப்டன் ரோகித்சர்மா அதிரடி காட்டினார். அவர்  பவுண்டரிகளையும், சிக்ஸர்களையம் விளாசியதால் இந்திய அணி 10 ஓவர்களிலே 58 ரன்களை தொட்டது. இந்த போட்டி மூலம் ரோகித்சர்மா - ஷிகர்தவான் ஜோடி ஒருநாள் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை சேர்த்த ஜோடி என்ற சாதனையை படைத்தது. இதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் - சவ்ரவ் கங்குலி இந்த சாதனையை படைத்துள்ளனர். 


ரோகித்சர்மா மிரட்டலான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தியதால் இங்கிலாந்து வீரர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தனர். டேவிட் வில்லி, டோப்ளே, ஓவர்டன், ப்ரைடன் கார்ஸ், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி என்று கேப்டன் பட்லர் 6 பவுலர்களை பயன்படுத்தி ஒரு விக்கெட்டை கூட அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் இந்தியா 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் விளாசியது. கேப்டன் ரோகித்சர்மா 58 பந்துகளில் 6 பவுண்டரி 5 சிக்ஸருடன் 76 ரன்களுடனும், ஷிகர்தவான் 54 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.  இதன்மூலம் இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அசத்தியது. 


 






முன்னதாக, முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியை பும்ராவும், முகமது ஷமியும் நிலைகுலையச் செய்தனர். குறிப்பாக, பும்ரா பந்துவீச்சில் ஜேசன் ராய், ஜோ ரூட், லிவிங்ஸ்டன் டக் அவுட்டாகினார். பும்ரா மட்டும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவருக்கு பக்கபலமாக முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்தியாவின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கேப்டன் பட்லர் மட்டும் 30 ரன்களை எடுத்தார். 25.2 ஓவர்கள் பேட் செய்த இங்கிலாந்து அணியில் நான்கு வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். 




எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் வெற்றியின் விளிம்பு வரை சென்று தோல்வியடைந்த இந்திய அணி பின்னர் நடைபெற்ற டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தற்போது 3 போட்டிகள கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. 7.2 ஓவர்கள் வீசி அதில் 3 ஓவர்களை மெய்டனாக்கி 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார்.


ALSO READ | IND vs ENG 1st ODI Highlights: இங்கி. எதிரான போட்டியில் இந்தியா படைத்த சாதனைகள்..! என்னென்ன தெரியுமா?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண