இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அந்த நாட்டின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரரும், முன்னாள் கேப்டனுமாகிய விராட்கோலி இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆடவில்லை. அதேபோல, அடிவயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக அர்ஷ்தீப்சிங்கும் இந்த போட்டியில் ஆடவில்லை.




விராட்கோலிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் நேற்று நடைபெற்ற வழக்கமான பயிற்சியில் பங்கேற்கவில்லை. இதனால், அவர் முதல் ஒருநாள் போட்டியில் ஆடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் நேற்றே இருந்தது. இந்த நிலையில், இன்று அவர் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை.






 


இந்திய அணியில் கேப்டன் ரோகித்சர்மா, ஷிகர்தவான், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார்யாதவ், ரிஷப்பண்ட், ஹர்திக்பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா, சாஹல் மற்றும் பிரசித் கிருஷ்ணா இடம்பெற்றுள்ளனர். இந்திய அணி இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.






இங்கிலாந்து அணியில் ஜேசன்ராய், ஜானி பார்ஸ்டோ, ஜோ ரூட், பென்ஸ்டோக்ஸ், கேப்டன் பட்லர், லிவிங்ஸ்டன், மொயின் அலி, கிரேக் ஓவர்டன், டேவிட் வில்லி, பைடன் கார்ஸ், ரீஸ் டோப்ளே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய மற்றும் ஜோ ரூட் இருவரையும் பும்ரா டக் அவுட்டாக்கி வெளியேற்றியுள்ளார். விராட்கோலி தொடர்ந்து மோசமான பார்மால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவர் காயத்தால் அவதிக்குள்ளாகி இருப்பது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண