Ind vs Bang, 2nd ODI: ரோஹித், ஸ்ரோயஸ் அரை சதம் வீண்.. ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது வங்கதேசம்!

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வங்கதேசம் 2-0 என்ற கணக்கில் வென்றது. கேப்டன் ரோகித், ஸ்ரேயாஸ், அக்சர் படேல் ஆகியோரின் அரை சதம் வீணானது.

Continues below advertisement

இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 50 ஓவர் முடிவில்  7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. இதையடுத்து, விளையாடிய இந்தியா 9 விக்கட்டுகளை இழந்து 50 ஓவர்களில் 266 ரன்களை குவித்தது. கடைசி பந்துக்கு 6 ரன் தேவைப்பட்ட நிலையில், இந்தியா தோல்வி அடைந்தது.

Continues below advertisement

இதையடுத்து, விளையாடிய இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரராக களம் புகுந்த விராட் கோலி, 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவன், 8 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.  6.1 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்தது. 10 ஓவர்கள் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 3 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது. வாஷிங்டன் சுந்தர் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். 13.3 ஆவது ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்களை எடுத்தது.

18.3 வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கே.எல்.ராகுல், 18 பந்துகளில் 14 ரன்களே எடுத்திருந்தார்.

நிதானமா விளையாடிய ஸ்ரேயஸ்
ஸ்ரேயஸ் ஐயர் நிதானமாக விளையாடி வருகிறார்.  அவர் தற்போது 56 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து வருகிறார். அவருடன் அக்சர் படேல் தோள் கொடுத்தார். அரை சதம் விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர், 82 ரன்கள் எடுத்த போது கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.41 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா 195 ரன்களை சேர்த்தது. அக்சர் படேலும் அரை சதம் பதிவு செய்தார்.

7 ஆவது விக்கெட்டும் பறிபோனது

42.4ஆவது ஓவரில் ஷர்துல் தாக்குர் ஆட்டமிழந்தார். இந்திய அணி 7  விக்கெட்டுகளை பறிகொடுத்து 209 ரன்களை எடுத்துள்ளது. 41 பந்துகளில் 63 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது.

அடுத்து வந்த வேகத்தில் தீபக் சஹர் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ரோகித் சர்மா களம் புகுந்தார். அவர் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வேளையில், மறுமுனையில் முகமது சிராஜ் கிளீன் போல்டு ஆகி நடையைக் கட்டினார்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் ரோகித் சர்மா அதிரடி காண்பித்தார். அவர் 28 பந்துகளில் அரை சதத்தை கடந்தார்.

ஆட்டநாயகன்

5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் விளாசியும் ரோகித்தால் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.
கடைசி ஒரு பந்தில் 6 ரன் எடுக்க வேண்டிய நிலையில் அதை எடுக்க முடியாமல் இந்தியா தோற்றது.
மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட், சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
ஆட்டநாயகனாக வங்கதேச அணியில் சதம் விளாசிய மெஹிதி ஹசன் மிராஸ் தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக, இந்தியா வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

அதன் அடிப்படையில், முதலில் களம் இறங்கிய வங்கதேச அணி பேட்டிங்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தொடக்க வீரர்களான அனாமுல் ஹக் மற்றும் லிட்டன் தாஸ் வந்த வேகத்தில் வெளியேற, அடுத்து வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ 35 பந்துகளில் 21 ரன்கள் அடித்து வெளியேறினார். 

வங்கதேச அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஷகில் அல் ஹாசன் 20 பந்துகளில் 8 ரன்களை எடுத்திருந்தபோது, வாஷிங்டன் சுந்தர் வீசிய 17 வது ஓவரை எதிர்கொண்டார். அப்போது அடிக்க முயற்சித்த ஷகிக் அல் ஹாசன் பந்தை மேலே உயர்த்தி ஷிகர் தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 

தொடர்ந்து, கடந்த சில போட்டிகளாக சொதப்பிவரும் முஷ்பிகுர் ரஹீம் 24 பந்துகளில் 12 ரன்கள் எடுத்துபோது மீண்டும் வாஷிங்டன் சுந்தர்- தவான் ஜோடி பிரிக்க, அடுத்து வந்த அஃபிஃப் ஹொசைனும் தான் சந்தித்த முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

அதன்பிறகு, மஹ்முதுல்லாஹ் உடன் ஜோடி சேர்ந்த அஃபிஃப் ஹொசைன் இந்திய அணியின் பந்துவீச்சை பதம் பார்க்க தொடங்கினர். 

சதம் விளாசிய மெஹிதி

60 ரன்களுக்கே 6 விக்கெட்களை தடுமாறியபோது ஜோடி சேர்ந்த இந்த ஜோடி தலா அரைசதங்கள் கடந்து பார்ட்னர்ஷிப்பாக 148 ரன்கள் குவித்தது. 96 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்த மஹ்முதுல்லாஹ், உம்ரான் மாலிக் வீசிய 47 வது ஓவரில் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.  அடுத்து உள்ளே வந்த நாசூம் அகமது தன் பங்கிற்கு ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்து 18 ரன்கள் குவிக்க, மறுமுனையில் நங்கூரம் போல் நின்ற  மெஹிதி ஹசன் 83 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அசத்தி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

50 ஓவர் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு 272 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்தது.

 

Continues below advertisement