டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் மற்றும் அதிவேக சதம் விளாசிய அணி என்ற பெருமையை பெற்றிருக்கிறது இந்திய அணி.


இந்தியா - வங்கதேசம் டெஸ்ட்:


வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த வகையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்றது.


இதனைத்தொடர்ந்து கான்பூரில் செப்டம்பர் 27 இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆனால் தொடர்ந்து அங்கு நிலவிய வானிலை காரணமாக போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நான்காவது நாளான இன்று (செப்டம்பர் 30) போட்டி தொடங்கியது. இதில், 74.2 ஓவர்கள் முடிவில் 233 ரன்களில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.


வரலாற்று சாதனை செய்த இந்திய அணி:


இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் யஜஸ்வி ஜெஸ்வால் பேட்டிங்கை தொடங்கினார். அந்த வகையில் இந்த போட்டியில் இந்திய அணி இரண்டு குறிப்பிடத்தக்க சாதனையை படைத்திருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் மற்றும் அதிவேக அணி சதம். அந்தவகையில், முதல் 3 ஓவர்களிலேயே இந்தியா 50 ரன்களை கடந்தது. இதன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் அதிவேகமாக 50 ரன்கள் அடித்த அணி என்ற மாபெரும் உலக சாதனையை இந்திய அணி செய்திருக்கிறது.






தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் 6 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தனர், ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மெஹிதி ஹசன் மிராஸ் பந்துவீச்சில் ரோஹித்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனிடையே இந்திய அணி வேகமாக அரைசத்தை கடந்தது. இந்த அட்டகாசமான தொடக்கத்தைத் தொடர்ந்து, இந்திய அணியின் வேகம் குறையவில்லை.


வெறும் 10.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. இந்த சாதனை ஒரு புதிய சாதனையை நிறுவியது மட்டுமல்லாமல், 2023 இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக செய்யப்பட்ட  12.2 ஓவர்களின் முந்தைய சாதனையையும் முறியடித்தது.ட்ரெண்ட் பிரிட்ஜில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது 4.2 ஓவர்களில் 50 ரன்களை எட்டிய இங்கிலாந்தின் முந்தைய சாதனையை இந்தியாவின் அதிவேக அரைசத சாதனை முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.