வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 3வது நாளில் இந்திய அணியின் அனுபவ வீரர் சேதேஷ்வர் புஜாரா தனது 19வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். 


நேற்றைய நாளில் 130 பந்துகளில் 13 பவுண்டரிகளுரன் 102 ரன்கள் எடுத்தார். இதுவே அவரது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதம் இதுவாகும். 87 பந்துகளில் அரை சதத்தை அடித்த புஜாரா, அடுத்த 43 பந்துகளில் 50 ரன்களை அடித்து தனது 19வது சதத்தை பூர்த்து செய்தார்.  முதல் இன்னிங்ஸில் புஜாராம் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். 






பார்ம் அவுட் டூ பார்ம் இன்:


பார்ம் அவுட் காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து புஜாரா நீக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் இருந்து அவரது ஆட்டம் வேறு மாதிரியாக அமைந்தது. 


ஓரே ஆண்டியில் இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட்டில் 1,094 ரன்கள் குவித்தார். இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்டில்  விளையாடி அரைசதம் அடித்தார். கடைசியாக, புஜாரா ஜனவரி 2019 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 193 ரன்கள் அடித்திருந்தார். அதன்பிறகு நீண்டலாக சத வறட்சிக்கு முற்றுப்புள்ளியை நேற்று வைத்தார். 


ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சதத்திற்கு பிறகு, இதுவரை புஜாரா 51 இன்னிங்ஸில் விளையாடியுள்ளார். ஒரு சதம் கூட்ட அடிக்கவில்லை என்றாலும், இந்த இடைப்பட்ட நேரத்தில் 14 அரைசதங்கள் அடித்துள்ளார். 


அதேபோல், புஜாரா இந்த 51 இன்னிங்ஸில் விளையாடி, 90 ரன்களுக்கு மேல் இரண்டு முறையும், 80 ரன்களுக்கு மேல் ஒரு முறையும், 70 ரன்களுக்கு மேல் இரண்டு முறையும் தனது விக்கெட்டை இழந்துள்ளார். 


100வது டெஸ்ட்:


இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகள் விளையாட புஜாராவுக்கு இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் தேவையாக உள்ளது. அவர் விளையாடினால் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய 13 வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெறுவார். 


அதேபோல், இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் புஜாரா 8வது இடத்தில் இருக்கிறார். 



  • முதல் இடம் - சச்சின் டெண்டுல்கர் (15,921)

  • இரண்டாம் இடம் - டிராவிட் (13,265)

  • மூன்றாம் இடம் - கவாஸ்கர் (10,122)

  • நான்காம் இடம் - லக்ஷ்மனன் (8,781)

  • 5ம் இடம் - சேவாக் (8,503)

  • 6ம் இடம் - விராட் கோலி (80,94)

  • 7வது இடம் - கங்குலி (7,212)

  • 8வது இடம் - புஜாரா (6,984)