பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ( Border-Gavaskar Trophy )100 விக்கெட்களை எடுத்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற புதிய சாதனையை நாதன் லயன் படைத்துள்ளார் . 


பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட்  தொடரின் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான  இரண்டாவது டெஸ்ட் போட்டி புது டெல்லியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று (18,-பிப்ரவரி,2023) நாதன் லயனின் சுழல் பந்துவீச்சில் ரோஹித் ஷர்மா, கே,.எல். ராகுல், புஜாரா, மற்றும் ஸ்ரேயாஸ் உள்ளிட்டவர்களின் விக்கெட்களை வீழ்த்தினார். 


அதிக விக்கெட்கள் எடுத்தவர்களில் இந்தியாவின் அணில் கும்ளே 20 போட்டிகளில் 111 விக்கெட்கள் எடுத்து 30.32 என்ற சராசரியுடன் முதல் இடத்தில் உள்ளார். 


இரண்டாவதாக, ரவிச்சந்திரன் அஸ்வின் 20 போட்டிகளில் 100 விக்கெட்களை எட்டினார். 


பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்த மூன்றாவது என்ற புதிய சாதனையை எட்டியுள்ளார் நாதன் லயன். 


நாதன் லயனின் 24-வது பார்டர் கவாஸ்கர் கோப்பை போட்டியில் இந்தியாவின் கே.எஸ். பாரத் விக்கெட்டை எடுத்ததன் மூலம் 100 விக்கெட்களை எட்டினார்.இந்தப் புள்ளிப்பட்டியலில் அதிக விக்கெட்களை எடுத்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர் என்ற வகையில் பிரெட் லீ 12 போட்டிகளில் 53 விக்கெட்களை எடுத்து 8 -வது இடத்தில் உள்ளார். 


இரண்டாவது டெஸ்ட் ரவுண்டப்: 


பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் இரண்டாவது போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸை டேவிட் வார்னர் மற்றும் ஹவாஜா ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் நிதானமாக ஆடிவந்த நிலையில், அணியின் ஸ்கோர் 50 ரன்களாக இருந்தபோது, டேவிட் வார்னர், 15 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.  முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து, 263 ரன்கள் எடுத்து இருந்தது. 



இந்திய அணியின் சார்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், அஸ்வின் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.


இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 262 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களை இழந்தது. அக்‌ஷர் படேல் 74 ரன் எடுத்து அவுட் ஆனார்.


இரண்டாவது இன்னிங்ஸ்:


ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது. 12 ரன்கள் எடுத்து ஹெட், கவாஜா களத்தில் உள்ளனர். 




மேலும் வாசிக்க..


IND vs AUS 2nd Test, LIVE Score: பரபரப்பை எகிற வைக்கும் முதல் இன்னிங்ஸில் ஆஸி 263; இந்தியா 262...!


Shewag Son: "15 வயதிலே ஐ.பி.எல்.லில் விளையாட உழைக்கிறான் என் மகன்" - பெருமையாக கூறிய தந்தை சேவாக்