IND vs AUS 2nd Test, LIVE Score: ஆஸ்திரேலியாவை கதறவிட்டு வெற்றியை தூக்கி சாப்பிட்ட இந்தியா...!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் குறித்த அப்டேட்களை உடனுக்குடன் அறிய ABP நாடு பக்கத்தில் இணைந்திருங்கள்.

முகேஷ் Last Updated: 19 Feb 2023 01:46 PM
ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் தோல்வி..! மிரட்டல் வெற்றி பெற்ற இந்தியா..!

115 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

4வது விக்கெட்டை இழந்த இந்தியா..! வெற்றிக்கு இன்னும் 27 ரன்களே தேவை..!

இந்திய அணியின் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்படும் நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதிவேகமாக 25 ஆயிரம் ரன்களை கடந்த விராட்கோலி அவுட்

அதிவேகமாக 25 ஆயிரம் ரன்களை கடந்த விராட்கோலி ஸ்டம்பிங் முறையில் அவுட்டாகி வெளியேறினார். 

அதிவேகமாக 25 ஆயிரம் ரன்கள்..! புதிய வரலாறு படைத்த கோலி

இந்திய அணியின் வீரர் விராட்கோலி இந்த போட்டியில் மூன்று வடிவ போட்டிகளிலும் சேர்த்து அதிவேகமாக 25 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

அதிரடி காட்டிய ரோகித்சர்மா ரன் அவுட் - இந்திய ரசிகர்கள் சோகம்

இந்திய அணிக்காக அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித்சர்மா 31 ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். 

இந்தியாவிற்கு 115 ரன்கள் டார்கெட்..! வெற்றி பெறப்போது யார்?

இந்திய அணிக்கு எதிராக 2வது இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில். இந்தியாவிற்கு 115 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. 

சுழலில் மிரட்டும் அஸ்வின், ஜடேஜா...

96 ரன்களை சேர்ப்பதற்குள் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அந்த அணி தற்போது 96 ரன்களை முன்னிலை பெற்றுள்ளது.

அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலியா..

மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியதுமே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது ஆஸ்திரேலிய அணி. டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித், லபுசக்னே மற்றும் ரென்ஷா ஆகியோர் சொற்ப ரன்களின் விக்கெட்களை பறிகொடுத்தனர்.

முடிந்தது 2வது நாள் ஆட்டம்..!

இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. களத்தில் ஹெட் 39 ரன்களுடனும், மார்னஸ் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

50 ரன்களைக் கடந்த ஆஸி..!

10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை இழந்து 51 ரன்கள் சேர்த்துள்ளது. 

முதல் விக்கெட்..!

ஜடேஜா வீசிய பந்தில் ஸ்ரேயஸ் ஐயரிடம் ஹவஜா கேட்ச் ஆகி வெளியேறியுள்ளார். அவர் 13 பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறியுள்ளார். 

2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா..!

ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹவஜா மற்றும் ஹெட் ஆகியோர் பேட்டிங் செய்து வருகின்றனர். 

அக்‌ஷர் பட்டேல் அவுட்..!

சிறப்பாக விளையாடி வந்த அக்‌ஷர் பட்டேல் மார்ஃபி பந்து வீச்சில் பேட் கம்மின்ஸிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அவர் 115 பந்தில் 74 ரன்கள் சேர்த்தார். அதில் 9 பவுண்டரியும் 3 சிக்ஸரும் அடங்கும். 

250 ரன்களைக் கடந்த இந்திய அணி..!

80 ஓவரில் அஸ்வின் மற்றும் அக்‌ஷர் அடித்த பவுண்டரி மூலம் இந்திய அணி 250 ரன்களைக் கடந்துள்ளது. தற்போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்துள்ளது. 

79வது ஓவரில் இந்திய அணி..!

கம்மின்ஸ் வீசிய 79வது ஓவரில் 2 பவுண்டரி 3 சிங்கிள் என மொத்தம் 11 ரன்கள் இந்திய  அணி சேர்த்துள்ளது. இந்திய அணி தற்போது 7 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் சேர்த்துள்ளது. 

78 ஓவர்கள் முடிவில் இந்திய அணி..!

78 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து 232 ரன்கள் சேர்த்துள்ளது.  களத்தில் அஸ்வின் 32 ரன்களுடனும், அக்‌ஷர் பட்டேல் 51 ரன்காளுடன் களத்தில் உள்ளனர். 

77 ஓவர்கள் முடிவில் இந்திய அணி..!

77 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 231 ரன்கள் சேர்த்துள்ளது. 

அரைசதம் கடந்த அக்‌ஷர்..!

7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வந்த அக்‌ஷர் பட்டேல் 95 பந்தில் 51 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் அடங்கும். 

அரைசதம் கடந்த அக்‌ஷர்..!

7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வந்த அக்‌ஷர் பட்டேல் 95 பந்தில் 51 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் அடங்கும். 

IND vs AUS 2nd Test, LIVE Score: இந்தியா 222 ரன்கள்..!

74 ஓவர்காள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்துள்ளது. 

பவுண்டரி..!

நாதன் லைன் வீசிய 74வது ஓவரின் நான்காவது பந்தில் அஸ்வின் பவுண்டரி பறக்க விட்டுள்ளார். 

75 + ரன்கள் பார்ட்னர் ஷிப்..!

அஸ்வின் மற்றும் அக்ச்ஜ்ஹர் பட்டேல் இணைந்து  தங்களது பார்ட்னர் ஷிப்பில் 79 ரன்கள் சேர்த்துள்ளனர்.  

72 ஓவர்கள் முடிவில் இந்திய அணி..!

72 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

IND vs AUS 2nd Test, LIVE Score: 25 வது ஓவரை வீசும் நாதன் லைன்..!

முதல் இன்னிங்ஸில் தனது 25வது ஓவரை நாதன் லைன் வீசி வருகிறார். அவர் இந்த இன்னிங்ஸில் இதுவரை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 

70 ஓவர்கள் முடிவில் இந்திய அணி

70 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் அஸ்வின் 24 ரன்களுடனும் அக்‌ஷர் 34 ரன்களுடனும் நிதானமாக விளையாடி வருகின்றனர்.  

200 ரன்களைக் கடந்த இந்திய அணி..!

150 ரன்களுக்குள் 7 விக்கெட்டை இழந்த இந்திய அணியை அஸ்வின் மற்றும் அக்‌ஷர் நிதானமாக ரன்கள் சேர்த்து 200 ரன்களைக் கடக்க வைத்துள்ளனர். 

தொடங்கியது ஆட்டம்..!

தேநீர் இடைவேளை முடிந்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது. களத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் 11 ரன்களுடனும் அக்‌ஷர் பட்டேல் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

தேநீர் இடைவேளை..!

மதிய உணவுக்குப் பிறகான தெநீர் இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. 

IND vs AUS 2nd Test, LIVE Score: ஒரு வழியாக 150 ரன்களை கடந்த இந்தியா - விக்கெட் வேட்டையில் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி  7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை கடந்தது

சதமடித்தது இந்திய அணி..!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 100 ரன்களை கடந்தது.

உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் - முன்னிலை பெறுமா இந்தியா?

இந்திய கிரிக்கெட் அணி உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது. விராட்கோலி 14 ரன்களுடனும், ஜடேஜா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

ஸ்ரேயாஸ் ஐயர் அவுட்

 நான்கு ரன்களை எடுத்த ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது ஆட்டமிழந்துள்ளார்.

100வது மேட்ச்சில் டக்-அவுட் ஆன புஜாரா.. நாதன் லயன் மிரட்டல்

இந்திய அணிக்காக 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய  புஜாரா, ரன் ஏதும் எடுக்காமல் நாதன் லயன் பந்துவீச்சில் டக் -அவுட் ஆனார்.

ரோகித் சர்மா அவுட்

32 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் ரோகித் சர்மா, நாதன் லயன் பந்துவீச்சில் போல்ட் முறையில் அவுட்டானார்.

17 ரன்களுக்கு நடையை கட்டிய கே.எல்.ராகுல் - முதல் விக்கெட்டை பறிகொடுத்த இந்தியா

இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 17 ரன்களில் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

IND vs AUS 2nd Test, LIVE Score: இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் - டேவிட் வார்னர் விளையாடமாட்டார் என அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விளையாட மாட்டார் என அறிவிப்பு - ஹெல்மேட்டில் பந்து பட்டு காயம் ஏற்பட்டதால் போட்டியிலிருந்து விலகல் 

ஆஸ்திரேலியா ஆல் -அவுட்..!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆகியுள்ளது




 

இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இதில் முதல் போட்டியை இந்திய அணி அபாரமாக வென்றது. இந்நிலையில் இன்று (பிப்ரவரி, 17) இரண்டாவது போட்டி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆல் -அவுட் ஆகியுள்ளது. இந்திய அணியின் சார்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், அஸ்வின் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர். 


250 ரன்களை கடந்த ஆஸ்திரேலியா அணி..!

9 விக்கெட்டுகளை இழந்து திணறி வரும் ஆஸ்திரேலிய அணி 250 ரன்களை கடந்துள்ளது. களத்தில் பீட்டர் ஹேண்ட்ஸ் கோம்ப் மற்றும் மேத்தீவ் குஹ்னமேன் உள்ளனர். 

9 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி 246 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், முகமது ஷமி பந்துவீச்சில் நாதன் லைன் 26 பந்தில் 10 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். 

250 டெஸ்ட் விக்கெட்டுகளை கடந்த வீழ்த்திய ஜடேஜா..!

இந்த போட்டியில் 3 விக்கெட்டுகள் இதுவரை வீழ்த்தியுள்ள ஜடேஜா டெஸ்ட் போட்டியில் மொத்தம் 252 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

8வது விக்கெட்டும் க்ளோஸ்..!

ஜடேஜாவின் ஓவரில் ஏற்கனவே பேட் கம்மின்ஸ் அவுட் ஆன நிலையில், அடுத்து களமிறங்கிய மார்ஃபியும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறியுள்ளார். இதனால் ஜடேஜா தனது ஓவரில் இரண்டு விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு ஷாக் கொடுத்துள்ளார். 

கம்மின்ஸ் அவுட்; 7வது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா..!

இரண்டாவது டெஸ்ர்ட் போட்டியில் நிதானமாக ஆடிவந்த ஆஸ்திரேலிய அணியின் கம்மின்ஸ் 59 பந்தில் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் எல்.பி.டபளுயூ ஆகி வெளியேறினார். 

அரைசதம் அடித்த ஹேண்ட்ஸ்கோம்ப்..!

தடுமாறி வரும் ஆஸ்திரேலிய அணியை மீட்க போராடி வரும் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 110 பந்துகளில் 50 ரன்கள் எடுத்துள்ளார். 

200 ரன்களைத் எட்டிய ஆஸ்திரேலிய அணி..!

6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டு இருந்த ஆஸ்திரேலிய அணி 200 ரன்களை எட்டியுள்ளது.  

மீண்டும் தொடங்கியது ஆட்டம்..!

தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவின் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் களத்தில் உள்ளனர். தற்போது ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. 

விக்கெட் வேட்டையில் இந்தியா.. 6 விக்கெட் இழந்து தடுமாற்றத்தில் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா அணி 53 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. 

4வது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா

டிராவிஸ் ஹெட் 12 ரன்கள் எடுத்திருந்தபோது ஷமி பந்துவீச்சில் கேட்ச் முறையில் அவுட்டானார்.

100 ரன்களை கடந்த ஆஸ்திரேலியா.. அரைசதம் கடந்து நிலைத்து நிற்கும் கவாஜா!

ஆஸ்திரேலியா அணி 30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் கவாஜா 52 ரன்களுடன் களத்தில் உள்ளார். 

மதிய உணவு இடைவேளை.. ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் சேர்ப்பு!

மதிய உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் சேர்த்துள்ளது. 

அடுத்தடுத்த பந்துகளில் அசத்திய அஸ்வின்... வெளியேறிய லபுசேனே, ஸ்மித்..!

23வது ஓவரை வீசிய அஸ்வின் லபுசேனே மற்றும் ஸ்மித்தின் விக்கெட்களை வீழ்த்தி விக்கெட் வேட்டையை நிகழ்த்த தொடங்கினார். 

50 ரன்களை கடந்து முதல் விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா.. ஆதிக்கம் செலுத்த தொடங்கிய இந்தியா!

44 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த வார்னர் முகமது ஷமி பந்தில் பாரத்-திடன் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

விக்கெட் இழப்பின்றி ரன் குவிக்கும் ஆஸ்திரேலியா.. அஸ்திவாரத்தை உடைக்குமா இந்தியா?

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிர் வார்னர் மற்றும் கவாஜா விக்கெட்டை விட்டுகொடுக்காமல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வேகப்பந்து வீச்சாளர் சிராஜிற்கு ரத்த காயம்...

டேவிட் வார்னர் அடித்த பந்தை தடுக்க முயன்றபோது, சிராஜின் வலது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஆனாலும், முதலுதவிக்குப் பிறகு சிராஜ் வழக்கம்போல் பந்துவீச தொடங்கினார்.

ஆஸ்திரேலியா அணி நிதான ஆட்டம்..!

3 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 18 ரன்களை சேர்த்துள்ளது

100 வது டெஸ்டில் களமிறங்கிய புஜாரா..!

35 வயதான சேதேஷ்வர் புஜாரா, 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 13வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற எலைட் கிளப்பில் இணைந்தார். அவர் இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 44.15 சராசரியில் 7021 ரன்கள் எடுத்துள்ளார்.

விளையாடும் ஆஸ்திரேலியா அணி:

வார்னர், கவாஜா, ஸ்மித், லாபுஷாக்னே, டிராவிஸ் ஹெட், ஹேண்ட்ஸ்காம்ப், கேரி (விக்கெட் கீப்பர்), கம்மின்ஸ் (கேப்டன்),  மர்பி, நாதன் லயன், குஹ்னேமன்.

விளையாடும் இந்திய அணி:

கேஎல் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), புஜாரா, விராட் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர்,  பாரத் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், அஷ்வின்,ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ்.

IND vs AUS, LIVE Score: பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா.. மீண்டும் பந்துவீச்சில் மிரட்டுமா இந்தியா?

இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

Background

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஹாட் ஸ்டார் செயலியிலும் நேரலையில் காணலாம்.


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட, டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது. இந்நிலையில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது. முதல் போட்டியை போலவே இந்த போட்டியிலும் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது. தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிபெற ஆஸ்திரேலிய அணியும் முனைப்பு காட்டி வருகிறது.


இந்திய அணி:


முதல் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த அஸ்வின் மற்றும் ஜடேஜா ஜோடி இந்த போட்டியிலும், ஆஸ்திரேலிய அணியை மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும், ஜடேஜா, அக்சர் மற்றும் அஸ்வின் ஆகியோர் அணிக்கு உறுதுணையாக உள்ளனர். கடந்த போட்டியில் சதம் விளாசிய கேப்டன் ரோகித் சர்மா, தனது நல்ல ஃபார்மை தொடர்கிறார். கோலி, புஜாரா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டால் எதிரணிக்கு பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியும். புஜாராவிற்கு இது 100வது டெஸ்ட் போட்டி ஆகும். தொடர்ந்து சொதப்பி வரும் துணை கேப்டன் கே.எல். ராகுலுக்கு பதிலாக, இளம் வீரர் சுப்மன் கில்லிற்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆஸ்திரேலிய அணி:


கடந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என எதிலுமே ஆஸ்திரேலிய அணியால் சோபிக்க முடியவில்லை. இதன் காரணமாக, வார்னர், லபுசக்னே, ஸ்மித் மற்றும் கவாஜா ஆகியோர் இந்த போட்டியில் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்த போட்டியில் களமிறங்குவது ஆஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கை அளிக்கிறது. தனது அறிமுகப் போட்டியிலேயே இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்த, சுழற்பந்துவீச்சாளர் மார்பி இந்த போட்டியிலும் கவனம் ஈர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஹெட் டு ஹெட்:


இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 104 முறை டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 31 முறை இந்திய அணியும், 43 முறை ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றுள்ளது. 28 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.


இந்திய உத்தேச அணி:


ரோஹித் சர்மா(கே),  புஜாரா , விராட் கோலி , ஸ்ட்ரேயாஸ் , கேஎல் ராகுல் , ரவிச்சந்திரன் அஷ்வின் , அக்சர் படேல் , ஜடேஜா , கேஎஸ் பாரத் , முகமது சிராஜ் , ஷமி


ஆஸ்திரேலிய உத்தேச அணி:


ஸ்டீவ் ஸ்மித் , மார்னஸ் லபுசக்னே , டேவிட் வார்னர் , உஸ்மான் கவாஜா , டிஎம் ஹெட் , கேரி , பாட் கம்மின்ஸ்(கே), நாதன் லயன் , மிட்செல் ஸ்டார்க் , போலண்ட், மார்பி

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.