டெஸ்ட் போட்டிகள் என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. நிதானமான ஆட்டம் என்றாலும் போட்டி இறுதி கட்டத்தை எட்டும்போது டி20 போட்டிகளில் ஏற்படும் விறுவிறுப்பையை மிஞ்சிவிடும் என்பதற்கு பல டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் உதாரணம் ஆகும். அதுவும் இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகள் என்றால் விறுவிறுப்பு, பரபரப்பு, சாதனைகள் போன்வற்றிற்கு பஞ்சமே இருக்காது.


இந்த நிலையில் நாக்பூரில் வரும் 9-ந் தேதி இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. அதைத்தொடர்ந்து டெல்லி, தரம்சாலா, அகமதாபாத் ஆகிய இடங்களில் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகள் நடக்க உள்ளது. 1947ம் ஆண்டுக்கு பிறகு இரு அணிகளும் மோதிய போட்டிகள் விவரங்கள், அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகளை கீழே காணலாம்.


நேருக்கு நேர்: 



  • இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இதுவரை 102 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர்.

  • இதில் இந்தியா 30 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

  • ஆஸ்திரேலிய அணி 43 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

  • ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது.

  • 28 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.

  • இரு அணிகளும் மோதிய கடைசி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அந்த தொடரையும் இந்தியாவே கைப்பற்றியது.


அணியின் அதிகபட்ச, குறைந்தபட்ச ரன்கள்:



  • 2004ம் ஆண்டு சிட்னியில் நடந்த டெஸ்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 705 ரன்கள் குவித்ததே அதிகபட்சம் ஆகும்.

  • 1948ம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியா 674 ரன்களை குவித்ததே இந்தியாவிற்கு எதிரான அதிகபட்சம் ஆகும்.

  • 2020ம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதே குறைந்தபட்சம் ஆகும்.

  • 1981ம் ஆண்டு ஆஸ்திரேலியா 83 ரன்களில் ஆல் அவுட்டானதே இந்தியாவிற்கு எதிரான குறைந்தபட்சம் ஆகும்.

  • இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்தியா சார்பில் வி.வி.எஸ், லட்சுமணன் 281 ரன்களை(2001ம் ஆண்டு) குவித்ததே தனிநபர் அதிகபட்சம்.

  • ஆஸ்திரேலிய அணி சார்பில் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் 329 ரன்களை குவித்ததே (2012ம் ஆண்டு) அதிகபட்சம் ஆகும்.

  • இந்தியா சார்பில் ஒரு இன்னிங்சில் ஜாசுபாய் படேல் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இன்று வரை சிறந்த பந்துவீச்சு.(1959ம் ஆண்டு)

  • ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் ஒரு இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியது சிறந்த பந்துவீச்சு (2017ம் ஆண்டு)

  • இந்தியா சார்பில் ஒரு டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் ஹர்பஜன்சிங். 2001ம் ஆண்டு 15 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

  • ஆஸ்திரேலியா சார்பில் 2017ம் ஆண்டு ஸ்டீவ் ஓ கீஃபீ 12 விக்கெட்டுகள் ஒரு போட்டியில் வீழ்த்தியுள்ளார்.


தனிநபர் சாதனைகள்: ( அதிக ரன்கள்)



  • இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.

  • சச்சின் 39 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 11 சதங்கள், 16 அரைசதங்களுடன் 3630 ரன்கள் விளாசியுள்ளார்.

  • ஆஸ்திரேலியா சார்பில் ரிக்கிபாண்டிங் 29 போட்டிகளில் ஆடி 2555 ரன்களை விளாசியுள்ளார். அதில் 12 அரைசதங்களும், 8 சதங்களும் அடங்கும்.

  • வி.வி.எஸ். லட்சுமணன் 2434 ரன்களும், ராகுல்டிராவிட் 2143 ரன்களும், மைக்கேல் கிளார்க் 2049 ரன்களும் எடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் இரட்டை சதம் விளாசியுள்ளனர். மைக்கேல் கிளார்க் மட்டும் முச்சதம் விளாசியுள்ளார்.


தனிநபர் சாதனைகள் (அதிக விக்கெட்டுகள்)



  • அனில் கும்ப்ளே 20 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

  • கும்ப்ளே ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

  • 2வது இடத்தில் ஹர்பஜன்சிங் உள்ளார். அவர் 18 டெஸ்ட் போட்டிகளில் 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் ஒரு இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

  • ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் முதலிடத்தில் உள்ளார். அவர் 22 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 94 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

  • அஸ்வின் 18 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 89 விக்கெட்டுகளையும், கபில்தேவ் 20 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 79 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.