ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கான இந்தியாவின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனும், இந்தியாவின் கேப்டனுமான சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் மற்றும் நட்சத்திர இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலியின் சாதனையை முறியடிக்க இன்னும் சில படிகள் உள்ளன.


அதிவேக 2 ஆயிரம் ரன்கள்:


அது என்னவென்றால், சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ஆயிரம் ரன்களைக் கடந்த பேட்ஸ்மேன் என்ற சாதனை படைக்க சூர்யகுமார் யாதவிற்கு இந்த ஆஸ்திரேலிய தொடர் முக்கியமானதாக இருக்கும்.  இருப்பினும், சூர்யகுமார் யாதவ் இந்த சாதனையை முறியடிப்பது அவ்வளவு எளிதானது காரியம் அல்ல. ஏனெனில் இந்த சாதனையில் தனது பெயரை படைக்க அடுத்த ஒரு இன்னிங்ஸில் 159 ரன்களை சூர்யகுமார் யாதவ் எடுக்க வேண்டும்.


இந்தநிலையில், அடுத்த இன்னிங்சில் 159 ரன்கள் எடுத்தால், பாபர் அசாமின் சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடிப்பார். சூர்யகுமார் யாதவ் அடுத்த இரண்டு இன்னிங்ஸுகளில் 159 ரன்கள் எடுத்தால், பாபர் அசாம் மற்றும் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் ஆகியோரை சமன் செய்வார். முன்னதாக, பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் சர்வதேச டி20யில் 52 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை கடந்து டி20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களை எட்டிய வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.


விராட் கோலி சாதனையை முறியடிக்க முடியுமா..? 


அடுத்த ஐந்து டி20 இன்னிங்ஸ்களில் சூர்யா 159 ரன்கள் எடுத்தால், விராட் கோலியின் சாதனையை முறியடிப்பார். சர்வதேச டி20யில் 2000 ரன்களைக் கடக்க 56 இன்னிங்ஸ்களை கோலி எடுத்து கொண்டார். இந்தநிலையில், எந்த பேட்ஸ்மேனின் சாதனையை சூர்யா முறியடிக்க முடியும் என்பது அடுத்து வரும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் தெரிந்துவிடும். இதுவரை, டி20 சர்வதேச போட்டிகலில் சூர்யகுமார் யாதவ் 50 இன்னிங்ஸில் 46.02 சராசரி மற்றும் 172.70 ஸ்ட்ரைக் ரேட்டில் 1841 ரன்கள் எடுத்துள்ளார். இந்த 50 இன்னிங்ஸில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் 3 சதங்கள் மற்றும் 15 அரை சதங்கள் அடித்துள்ளார். 


முதல் முறையாக இந்தியாவின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்: 


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் முதல்முறையாக இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட இருக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்திய டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருந்து வந்தார். ஆனால் 2023 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டதால், கேப்டன் பொறுப்பு அந்த ஃபார்மட்டில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான அணியின் துணை கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து, ஓய்வில் இருந்து திரும்பும் ஷ்ரேயாஸ் ஐயர் கடைசி இரண்டு போட்டிகளில் துணை கேப்டனாக அணியில் இணைவார். 


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 இந்திய அணி: 


சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார்.


இந்தியா vs ஆஸ்திரேலிய டி20 தொடர் அட்டவணை:



  1. நவம்பர் 23: முதல் டி20, விசாகப்பட்டினம்

  2. நவம்பர் 26: இரண்டாவது டி20, திருவனந்தபுரம்

  3. நவம்பர் 28: மூன்றாவது டி20, கவுகாத்தி

  4. டிசம்பர் 1: நான்காவது டி20, ராய்ப்பூர்

  5. டிசம்பர் 3: ஐந்தாவது டி20, பெங்களூரு