சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி 19 மாதங்களுக்குப் பிறகு, சூர்யகுமார் யாதவ் தனது முதல் அரைசதத்தை விளாசினார்.


இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி:


அடுத்த மாதம் தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடருக்க தயாராகும் வகையில், ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, ஷமியின் அபார பந்துவீச்சால் 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி சுப்மன் கில், ருத்ராஜ் கெய்க்வாட், கே.எல். ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அரைசதத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இதனிடையே, இந்த போட்டியில் இந்திய விரர்கள் சிலர் மகத்தான சில தனிநபர் சாதனைகளை படைத்துள்ளனர்.


முகமது ஷமி:


முகமது ஷமி நேற்றைய போட்டியில் 51 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது ஒருநாள் போட்டிகள் அவர் எடுத்த இரண்டாவது 5 விக்கெட்ஸ் மற்றும் சிறந்த பந்து வீச்சு ஆகும். இதன் மூலம், கடந்த 16 ஆண்டுகளில் உள்ளூரில் 5 விக்கெட்ஸ் எடுத்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் . கடைசியாக கடந்த 2007ம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற போட்டியில் ஜாகிர் கான் இந்த சாதனையை படைத்து இருந்தார். உள்ளூர்ல் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 வ்க்கெட்ஸ் எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார்.  ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒருநாள் போட்டியில் உள்ளூரில் அதிக விக்கெட் எடுத்த இந்திய விரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.


முன்னதாக, குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் 24 விக்கெட்டுகளை எடுத்து இருந்த நிலையில் அந்த எண்ணிக்கையை ஷமி கடந்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்ஸ் எடுத்த மூன்றாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் ஷமி தனதாக்கியுள்ளார்.  இதன் மூலம், நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் ஷமி பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதையும் படிங்க: India Ranking: சர்வதேச கிரிக்கெட் வரலாற்றிலேயே இரண்டாவது அணி.. ரேங்கிங்கில் இந்தியா படைத்த சாதனை, முதலிடத்தில் யார்?


ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒடிஐ-யில் 5 விக்கெட்ஸ் எடுத்த இந்தியர்கள்:



  • 1983 - கபில் தேவ் - 5/43, நாட்டிங்ஹாம்

  • 2004 - அஜித் அகர்கர் - 6/42, மெல்போர்ன்

  • 2023, முகமது ஷமி - 5/51, மொஜாலி


சூர்யகுமார் யாதவ்:


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசினார். ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான 19 மாதங்களுக்குப் பிறகு தனது முதல் அரைசதத்தை அவர் பதிவு செய்துள்ளார். இதற்காக அவர் 21 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டார்.  இதனிடையே, டேவிட் வார்னர் நேற்றைய போட்டியில் அடுத்த முதல் சிக்சரின் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது 100வது சிக்சரை பூர்த்தி செய்தார்.