நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஆக்லாந்தில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில், இந்திய அணியின் கேப்டன் மிதாலிராஜ் சிறப்பாக பேட் செய்து 68 ரன்கள் குவித்தார்.
இந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் மித்தாலிராஜ் பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளார். மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக அரைசதம் அடித்த வீராங்கனை என்ற சாதனையை இதுநாள் வரை தன்வசம் வைத்திருந்த நியூசிலாந்தின் டெப்பி ஹாக்லியின் சாதனையை சமன் செய்தார். உலககோப்பை தொடரில் மிதாலிராஜ் அடிக்கும் 7வது அரைசதம் இதுவாகும். இரண்டாவது இடத்தில் நியூசிலாந்தில் சூசி பேட்ஸ் 6 அரைசதங்களுடன் உள்ளார்.
ஏற்கனவே மகளிர் கிரிக்கெட்டில் அதிக அரைசதம், அதிக ரன்கள் என்ற பல்வேறு சாதனைகளை தன்வசம் வைத்துள்ள மித்தாலிராஜ் இந்த போட்டியில் அடித்தது அவரது 63-வது அரைசதம் ஆகும். ஆண்கள் மற்றும் பெண்கள் அணி என இரு இந்திய அணிகளுக்கும் சேர்த்து மித்தாலி ராஜூற்கு முன்பாக அதிக அரைசதங்கள் அடித்த வீரர்களாக சச்சின், டிராவிட், தோனி, கங்குலி, விராட் கோலி ஆகியோர் மட்டுமே உள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தபடியாக மித்தாலிராஜ் உள்ளார். முதலிடத்தில் 96 அரைசதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். 40 வயதான மித்தாலிராஜ் 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 699 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 214 ரன்கள் குவித்துள்ளார். ஒரு சதமும், 4 அரைசதமும் அடங்கும். 229 ஒருநாள் போட்டிகளில் ஆடி 7 ஆயிரத்து 669 ரன்களை குவித்துள்ளார். 7 சதங்களும், 63 அரைசதங்களும் அடங்கம். அதிகபட்சமாக 125 ரன்களை ஆட்டமிழக்காமல் எடுத்துள்ளார். 89 டி20 போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 364 ரன்களை குவித்துள்ளார். இவற்றில் 17 அரைசதங்கள் அடங்கும்.
மித்தாலிராஜ், யஸ்திகா பாட்டீயா, ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரின் சிறப்பான அரைசதத்தால் இந்திய அணி இந்த போட்டியில் 250 ரன்களை கடந்து சிறப்பாக பேட் செய்து வருகிறது.
மேலும் படிக்க : ICC Women's World Cup 2022: ஆட்டத்தின்போது களத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. என்ன ஆச்சு? வைரலாகும் வீடியோ
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்