மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. 


இதைத் தொடர்ந்து 141 ரன்கள் என்ற இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கியது. பங்களாதேஷ் அணியின் ஆட்டத்தின் போது  47ஆவது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சு வீராங்கனை சமிலியா கான்னல் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை உடனடியாக அங்கு இருந்த மருத்துவ குழு ஆய்வு செய்தது. அதன்பின்னர் அவரை வேகமாக ஆம்புலன்ஸ் பயன்படுத்தி மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 






அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பின்னர் வெஸ்ட் இண்டீஸ் போராடி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்கு பின்னர் பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஸ்டெஃபனி டெய்லர், “கான்னல் திடீரென்று மயக்கம் அடைந்தார். அவரை மருத்துவர் குழு ஆய்வு செய்தது. அவர் எப்போதும் ஒரு போராட்ட குணம் படைத்தவர். ஆகவே இந்த உடல் நிலை பிரச்சனையிலிருந்தும் அவர் விரைவில் குணம் அடைவார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 


சமிலியா கான்னல் மயங்கி கீழே விழுந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் மகளிர் உலகக் கோப்பை தொடரில் 6 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்திய மகளிர் அணி 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி மற்றும் 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க:15 ஆண்டுகளாக மர்மம் நீடித்து வரும் பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் உல்மரின் மரணம்..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண