சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. இது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


இந்திய கிரிக்கெட்:


இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது. அதேபோல், ஐசிசி தரவரிசைப் பட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கிறது. முன்னதாக, டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் 118 புள்ளிகளும், ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 121 புள்ளிகளும், டி20 தரவரிசைப் பட்டியலில் 265 புள்ளிகளுடனும் இந்திய அணி முதல் இடத்தைப் பிடித்து கிரிக்கெட் உலகில் தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. 


முதல் இடம்:


இதன் மூலம் ஒரே நேரத்தில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் முதல் இடத்தில் இருக்கிறது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு அடுத்தபடியாக ஒரே நேரத்தில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் முதல் இடத்தை பிடித்துள்ள 2 வது அணியாகவும் இந்திய அணி இருக்கிறது. அதிக நாட்கள் இந்த பெருமையை தங்கள் வசம் வைத்திருக்கும் அணியும் இந்திய அணிதான்.


இச்சூழலில், தற்போது டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற சாதானையை பதிவு செய்துள்ளது. முன்னதாக, நேற்று (டிசம்பர் 1) ராய்பூரில் நடைபெற்ற டி 20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தான் இந்திய அணி இந்த சாதனையை படைத்துள்ளது.


சாதனை படைத்த இந்திய அணி:


சர்வதேச டி20 வடிவத்தில் இதுவரை 213 போட்டிகளில் விளையாடியிருக்கும் இந்திய அணி, 63.84 சதவீத வெற்றிகளுடன் 136 போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. 67 போட்டிகளில் தோல்வி, ஒரு போட்டி ட்ரா, 3 போட்டிகள் கைவிடப்பட்ட போட்டிகளாகவும் இருக்கின்றன.


இதன்மூலம் 226 போட்டிகளில் விளையாடி 135 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளியிருக்கும் இந்திய அணி அதிக டி20 போட்டிகளில் வெற்றிபெற்ற முதல் அணியாக மாறியுள்ளது.


அதன்படி முதல் பத்து இடத்தில் இருக்கும் அணிகள்:


இந்தியா - 213 போட்டிகளில் 136 வெற்றி


பாகிஸ்தான் - 226 போட்டிகளில் 135 வெற்றி


நியூசிலாந்து - 200 போட்டிகளில் 102 வெற்றிகள்


ஆஸ்திரேலியா - 181 போட்டிகளில் 95 வெற்றி


தென்னாப்பிரிக்கா - 171 போட்டிகளில் 95 வெற்றி


இங்கிலாந்து - 177 போட்டிகளில் 92 வெற்றி


இலங்கை - 180 போட்டிகளில் 79 வெற்றி


வெஸ்ட் இண்டீஸ் - 184 போட்டிகளில் 76 வெற்றி


ஆப்கானிஸ்தான் - 118 போட்டிகளில் 74 வெற்றி


அயர்லாந்து - 154 போட்டிகளில் 64 வெற்றிகளை பெற்றிருக்கிறது.


மேலும் படிக்க: Vaishali: தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர்: பிரக்ஞானந்தா சகோதரி வைஷாலிக்கு முதலமைச்சர் வாழ்த்து


 


மேலும் படிக்க: India vs Australia 4th T20 - Innings Highlights: ரிங்கு சிங்- ஜித்தேஷ் அதிரடி... ஆஸ்திரேலிய அணிக்கு 175 ரன்கள் இலக்கு!