இந்தியாவுக்கு எதிரான பாக்சிங் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. 


BGT தொடர்: 


ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல்  போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது, இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி டிராவில் முடிந்தது. இதனால் பாக்சிங் டே டெஸ்ட் முக்கியமான போட்டியாக பார்க்கபட்டது.


ஆஸ்திரேலியா ஆதிக்கம்:


மெல்போர்னில்  தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது, ஆஸ்திரேலிய அணி ஸ்டீவன் ஸ்மித்தின் சதத்தால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ்சில் 475 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட் எடுத்தார். 


அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ்சில் 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, 191/6 என்கிற இக்கட்டான நிலையில் நிதிஷ் குமார் ரெட்டி சதம் அடித்து இந்திய அணி கவுரமான ஸ்கோர் அடிக்க உதவினார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ்சில் 106 ரன்கள் முன்னிலை பெற்றது.


340 ரன்கள் இலக்கு: 


அடுத்ததாக இரண்டாவது இன்னிங்ஸ்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பும்ரா தலைவலி தந்தார்.  அவரது வேகத்தில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், லபுஷேனே -கம்மின்ஸ் ஜோடி களத்தில் நங்கூரமிட்டு நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர். கடைசி விக்கெட்டுக்கு  நாதன் லயன் மற்றும் ஸ்காட் போலாண்ட் இந்திய அணி பவுலர்களுக்கு தண்ணீ காட்டினர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்குன் 340 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 


இதையும் படிங்க: BGT 2024 : ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளம்புங்க.. கோலி ரோகித் சொதப்பல் பேட்டிங்.. கொதித்து எழும்பும் ரசிகர்கள்


இந்தியா தடுமாற்றம்:


கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர், தேனீர் இடைவேளை வரை இருவரும் நிதானமாக ஆடி வந்தனர், இந்திய அணி தேனீர் இடைவேளை வரை 112/3 விக்கெட்டுகளை மட்டும் இழந்திருந்ததால், இந்த போட்டி டிராவில் முடியும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. 


இந்தியா தோல்வி: 


தேனீர் இடைவேளை முடிந்து வந்தவுடன் போட்டி அப்படியே ஆஸ்திரேலிய பக்கம் திரும்பியது, ரிஷப் பண்ட் தேவையில்லாமல் டிராவில் ஹெட் பந்தில் சிக்சருக்கு ஆசைப்பட்டு மார்ஷ்சிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார். இதன் பின்னர் வந்த ஜடேஜா 2 ரன்னிலும், நிதிஷ் ரெட்டி 1ரன்னிலும் நடையை கட்டினர், சிறப்பான முறையில் விளையாடி வந்த ஜெய்ஸ்வால் சர்ச்சையான முடிவால் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். 


இதனால் இந்திய அணியின் தோல்வி உறுதியானது, இறுதியில் இந்திய அணி 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்த போட்டியை ஆஸ்திரேலியை 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக  13 ஆண்டுகளுக்கு பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.