இந்தியாவுக்கு எதிரான பாக்சிங் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. 


BGT தொடர்: 


ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல்  போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது, இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி டிராவில் முடிந்தது. இதனால் முக்கியமான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக பார்க்கபட்டது.


ஆஸ்திரேலியா ஆதிக்கம்:


மெல்போர்னில்  தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது, ஆஸ்திரேலிய அணி ஸ்டீவன் ஸ்மித்தின் சதத்தால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ்சில் 475 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட் எடுத்தார்.