IND Vs AUS 5th T20: ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ப்ரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் வென்று, தொடரை கைப்பற்ற இந்திய அணி தீவிரம் காட்டுகிறது.

Continues below advertisement

இந்தியா - ஆஸ்திரேலியா 5வது டி20 போட்டி

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரை இழந்தது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட, இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்று அசத்தியது. ஆனாலும், அதற்கடுத்த இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றியை குவித்து இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த தொடரை இழக்கும் வாய்ப்பை தவிர்த்துள்ளது. இந்நிலையில் ப்ரிஸ்பேனில் இன்று நடைபெறும் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்ற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி ஆர்வம் காட்டுகிறது. அதேநேரம், இன்றைய போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய ஆஸ்திரேலிய அணியும் முனைப்பு கொண்டுள்ளது. இதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Continues below advertisement

இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி விவரங்கள்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5வது டி20 போட்டியானது ப்ரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதன் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

இந்திய அணி நிலவரம் என்ன?

இந்திய அணியின் முன்கள வீரர்களான அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் ஏற்படும் அழுத்தம், நடுகள வீரர்களை தடுமாறச் செய்கிறது. உண்மையில் சொல்லப்போனால், பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்தால் மட்டுமே இந்த தொடரில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. ஆனால், அந்த பிரிவிலும் நட்சத்திர வீரர் பும்ரா இந்த தொடரில் பெரிதாக ஜொலிக்கவில்லை. இதன் காரணமாக இன்றையை கடைசி போட்டியில் பும்ராவிற்கு ஓய்வளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேநேரம் பேட்டிங் யூனிட்டில் சஞ்சு சாம்சன் ப்ளேயிங் லெவனில் இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஆல்-ரவுண்டர்கள் வாஷிங்டன் சுந்தர், ஷிவம்துபே மற்றும் அக்சர் படேல் ஆகியோர் அணிக்கு பக்கபலமாக இருக்கின்றனர். இந்நிலையில் தொடரும் பிரச்னைகளை சரிசெய்தால் மட்டுமே, இன்றைய போட்டியில் வென்று இந்தியாவால் தொடரை கைப்பற்ற முடியும்.

ப்ரிஸ்பேன் மைதானம் எப்படி?

ப்ரிஸ்பேனில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் உள்ளது. கப்பா மைதானம் பாரம்பரியமாக வேகப்பந்து வீச்சாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான வேகம் மற்றும் பவுன்ஸ் கொண்டது. பிக்பேஸ் லீகில் இந்த மைதானத்தில் தான் அதிகப்படியான ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றும் பேட்ஸ்மேன்கள் ரன்மழை பொழியக்கூடும். ஒருவேளை மழையால் போட்டி பாதிக்கப்பட்டால், இந்த தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றக்கூடும்.

இந்தியா - ஆஸ்திரேலியா: உத்தேச ப்ளேயிங் லெவன்

இந்தியா: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கே), திலக் வர்மா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜிதேஷ் சர்மா (வி.கீ.,), ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங், வருண் சகரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா

ஆஸ்திரேலியா: மிட்ச் மார்ஷ் (கே), மேட் ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ் (வி.கீ.,), க்ளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்ச் ஓவன்/ஜோஷ் பிலிப், நாதன் எல்லிஸ், சேவியர் பார்ட்லெட், ஆடம் ஜாம்பா, மஹ்லி பியர்ட்மேன்/பென் ட்வார்ஷியஸ்