இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது மற்றும் கடைசி நாளை பொறுத்தே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுமா என்பது தெரியும். 


இதற்கு இலங்கை மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் போட்டியும் முக்கிய காரணமாய் இருக்கும் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? 


வருகின்ற ஜூன் 7 முதல் 11 வரை லண்டனில் உள்ள கியா ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு ஏற்கனவே புள்ளிகளின் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி தகுதிபெற்றது. இரண்டாவது அணியாக இறுதிப்போட்டியாக தகுதி பெறும் அணி எது என்ற கேள்விக்கு இன்றைய நாளே பதில் சொல்லும். 


இரண்டாவது இடத்திற்கான போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மட்டுமே போட்டியில் உள்ளது. இன்று நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 5வது நாள் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் இறுதி போட்டிக்கான வாய்ப்பை தக்க வைக்கும். இந்த போட்டியில் தோற்றாலோ அல்லது டிரா செய்தாலோ வாய்ப்பை இழக்கும். 


இந்தியாவின் நிலைமை:


இந்தியாவை பொறுத்தவரை இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு எளிதான வாய்ப்புகளை கையில் வைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றால், இலங்கை வெற்றிபெற்றாலும் பயனில்லை. இருப்பினும், இந்திய அணி தோல்வியை தவிர்ப்பது நல்லது. 


இலங்கை அணிக்கு எதிரான கடைசி நாளில் நியூசிலாந்து அணி வெற்றிபெற 146 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. கைவசம் 7 விக்கெட்கள் உள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றால் இலங்கை இறுதிப்போட்டி செல்வதற்கான வாய்ப்பு பறிபோகும். இலங்கை நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இதில் ஒன்றில் தோல்வியோ டிராவோ ஆனால் இலங்கை நிலைமை புஷ்தான். 


கடைசி நாளில் ஆஸ்திரேலிய அணி 1 ஒரு விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் பின் தங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இந்திய அணி எடுத்து. அவர்கள் வைக்கும் டார்கெட்டை சேஸ் செய்தால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். ஆனால் இது நடக்காத ஒன்று. அதிகபட்சமாக இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி டிரா ஆகவே அதிக வாய்ப்புள்ளது.